Friday, December 23, 2011

புத்தாண்டு சிந்தனைகள்

புத்தாண்டு சிந்தனைகள் 

2012புத்தாண்டை வரவேற்க இந்த உலக மக்கள் தயாராகிகொண்டிருக்கிறார்கள்

3112.2011இரவு பன்னிரண்டு மணி அடித்தவுடன்
புத்தாண்டு கோலாகலமாக பிறந்துவிடும்

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து நடைபெறுகிறது
ஒருவொருக்கொருவர் வாழ்த்து சொல்லிகொள்வதில் தவறில்லை

ஆனால் தண்ணியடித்துவிட்டு தறி கெட்டு அலைவது
நம் இந்திய கலாசாரத்திற்கு தேவையா
என்பதுதான் கேள்வி?

It is a new life everyday என்றார்  James Allen

அதைதான் பாரதியும் இன்று புதிதாய் பிறந்தோம் 
என்று ஒவ்வொரு நாளையும் புதிதாக கருதி வாழ சொன்னான்
இந்த வாழ்க்கை இறைவன் நமக்களித்த பொக்கிஷம் 
நல்வாய்ப்பு,வரம், கொடை

அதை நாம் ஒழுங்காக நல்ல முறையில் வாழ்கிறோமா என்பது கேள்விக்குறியே 

நம் வாழ்வை,சமூகத்தை சிதைக்கும் குடி பழக்கம், 
போதை பழக்கம், பிறர் குடியை கெடுத்தல்
,குழந்தை தொழிலாளர்களை  வேலைக்கு வைத்தல்
,பிறரை வஞ்சித்தல்,பிறரை ஏமாற்றுதல்,லஞ்சம் வாங்குதல்,
 பிறரை சொல்லால்,உடலால்,துன்புறுத்துதல்
பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி 
அவர்களின் வாழ்வை சுரண்டுதல் 
சுற்றுபுறத்தை பாழ்படுத்துதல்,
பொது சொத்துகளுக்கு ,தீங்கு ஏற்படுத்துதல், 
நீர் நிலைகளை மாசு படுத்தல்
போன்ற தீய பழக்கங்களை 
அறவே தவிர்ப்பேன் என்று 
ஒவ்வொரு மனிதனும்
இந்த புத்தாண்டில் சபதம் 
மேற்கொள்வானானால்
இந்த புத்தாண்டு 
இந்த உலக மக்களுக்கு 
உண்மையிலேயே இனிமையாக 
புத்தாண்டாக இருக்கும் 

அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுதல்,
துன்புற்றோர்க்கு  உதவுதல் 
ஆலயம் சென்று அனைவரின்
நலனுக்காக பிரார்த்தனை செய்தல் போன்ற 
நல்ல செயல்களை செய்யும் வழக்கத்தை
இந்த ஆண்டிலிருந்து தொடங்கலாமே 

அதை விடுத்து கோடிகணக்கான ரூபாய்க்கு
குடித்து கும்மாளம் போட்டு கூத்தடித்து 
புத்தாண்டை வரவேற்பதால் யாருக்கு லாபம்?


தேவையற்ற செலவுகள் ,மக்களுக்கும் அரசுக்கும்

உண்மையில் கொள்ளை லாபம் அடைபவர்கள் 
சமுதாயத்தை சீரழிக்கும் 
செல்போன் நிறுவனங்கள்,
விடுதி உரிமையாளர்கள்,
சாராய வியாபாரிகள் 
போன்ற பணமுதலைகளே 

மாற்றம் தேவை .எதற்க்காக?
ஏமாற்றத்தை தவிர்ப்பதர்காகதான் 
வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காகதான்


No comments: