Saturday, December 31, 2011

2011 ஆம் ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவை மன்னர்

2011 ஆம் ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவை  மன்னர் 

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்தல் தொடர்பாக

 க கு மு. கழக தலைவர் அவர்களின் நகைச்சுவை விருந்து.

"ராஜீவ் காந்தியே உயிரோடு இருந்திருந்தால் தன்னை 
கொலை செய்தவர்களை மன்னித்திருப்பார்"


(ஒருவேளை ராஜீவின் ஆவி அவரிடம் வந்து இதை சொல்லியதோ?)







Friday, December 30, 2011

புத்தாண்டை வரவேற்போம்

புத்தாண்டை வரவேற்போம் 

புத்தாண்டை வரவேற்போம் 
புதிய சிந்தனைகளோடு 

பகைமையை ஒழிப்போம் 


நட்புக்கரம் நீட்டுவோம் 

பாசத்தை வளர்ப்போம்

நேசத்தை விரும்புவோம்

அன்போடு பழகுவோம்

ஆனந்தமாக வாழ்வோம்

போதைக்கு விடை கொடுப்போம் 


நல்ல பாதைக்கு வழி வகுப்போம் 

மத நெறியை கடைபிடிப்போம் 


மத வெறியை தடை செய்வோம் 

சுரண்டலை தடுப்போம்

சுற்றுப்புற சூழலை காப்போம் 


சுகமாக இவ்வுலகில் வாழ்ந்திடுவோம் 

அனைவரும் நலமாய் வாழ

அனைவருக்கும் வாய்ப்பளிப்போம்








Thursday, December 29, 2011

விவசாயிகளின் நிலைமை ஏன் பரிதாபகரமாக உள்ளது?

விவசாயிகளின் நிலைமை ஏன் பரிதாபகரமாக உள்ளது?

முன்பு விவசாயிகள் இயற்கை முறையில் யாரையும் சாராது விவசாயம் செய்து வந்தனர்

இலவசமாக கிடைத்த இயற்க்கை உரங்களை பயன்படுத்தி சத்தான
உணவு பொருட்களை பயிரிட்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்

இந்திய சுதந்திரம் அடைந்தவுடன் அதிக உணவு உற்பத்தி பெருக்க ரசாயன உரங்களையும் பூசிகளை கொள்ள பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி
பயிர் செய்ய அவர்களை மூளை சலவை செய்து அவர்களை உர வியாபாரிகளையும் அரசுகளையும் நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
.
கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் ,ஆறுகள் அனைத்தும் பராமரிப்பின்றி
நீர் வரண்டுபோனதால் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
அதுவும் வரண்டுபோய் ஆழ்குழாய் மூலம் நீரை இறைத்து விவசாயம் செய்யும் நிலை வந்தபிறகு மின்மொடோரை இயக்க மின்சாரம் பயன்படுத்த நேரிட்டது.
 இப்படியாக இலவசமாக தன உழைப்பை மட்டுமே நம்பி இயற்க்கை விவ சாயம் செய்துவந்த விவசாயிகள் எப்பொழுது பிறரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளபட்டனரோ அன்றே அவர்களின் வீழ்ச்சி தொடங்கியது
.உற்பத்தி செலவுகள் பன்மடங்கு பெருகியது.
பயிருக்காக வாங்கிய கடன், வட்டி என சுமை ஏறியது.

ஆனால் துரதிஷ்டவசமாக உணவு பொருட்கள் விலை
செய்யப்பட்ட செலவை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படவில்லை.

 தரகர்கர்கள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அதிக விலைக்கு வியாபாரிகளிடம் விற்று கொழுத்தனர்
பயிர் செய்த விவசாயிக்கு அடக்க விலையும் கிடைக்கவில்லை,லாபமும் இல்லை இந்நிலை தொடர்ந்துகொண்டே வருகிறது
.
அரசுகள் விவசாயிகளை கண்டுகொள்வதேயில்லை அவ்வபோது சில சலுகைகளை அறிவித்தாலும் அதிலும் இடைத்தரகர்கள் புகுந்து அதையும் கொள்ளையடித்து. வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் பயிரிடும் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பெறும் வரை இந்த அவல நிலை நீடிக்கும்.

விவசாயத்திற்கு தொடர்பில்லாத நபர்களை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலிருந்து நீக்குவதும், இடைத்தரகர்கள் ஒழிப்பதும்,உணவு சேமிப்பு கிடங்குகளை அமைப்பதும், விற்று தீரும் வரை பொருட்கள் கெடாமல் இருக்க உணவு பாதுகாப்பு நிலையங்களை அமைத்தலும் விவசாயிகள் பிரச்சினைகள் தீர மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகளாகும்
.
முன்கூட்டிய திட்டமிடுதலும் தேவையான   உரம் விதை போன்றவற்றை சேமித்து  தயாராக வைத்தலும் இயற்க்கை விவசாயத்திற்கு  மீண்டும் மாறுதலும் ,நீர்நிலைகளை கொள்ளையடிக்கும் ஒப்பந்தகாரகளிடம் பராமரிப்பு செய்ய விடாது அவர்கள் மேற்பார்வையில் பராமரித்து கொள்வது நல்ல பயனை தரும் 

Tuesday, December 27, 2011

India against corruption Chairman- Anna Hazaare
VIZ
Indian Coruuption Congress Chair Person Sonia &Co


அண்ணா :  எனக்கு சி பி ஐ பொம்மைதான் வேணும் 


சோனியா . நான் அதை கொடுக்கமாட்டேன் .அதை கொடுத்தால் என்னை நீ ஜெயிலில்தள்ளி விடுவாய் 


அண்ணா: எனக்கு எல்லா கார்போரேட் கம்பனிகளும் வேணும் 


சோனியா:அவர்களை உன்னிடம் கொடுத்துவிட்டால் யார் எங்களுக்கு தேர்தல் நிதி தருவார்கள்.நான் அவர்களை கொடுக்கமாட்டேன் 


அண்ணா: எனக்கு பிரதமந்திரி உட்பட அனைத்து எம்பீக்களும் வேண்டும்


சோனியா: நான் யாரையும் தரமாட்டேன் 


அண்ணா: நான் உண்ணாவிரதம் இருப்பேன்,எல்லோரையும் ஜெயிலுக்கு போகசொல்லுவேன்  


சோனியா: நல்லது அதை செய்யுங்கள் அதுதான் எங்களுக்கும் நாட்டிற்கும் நல்லது  


சோனியா: நாங்கள் உறுதியளித்தபடி லோக்பால் மசோதாவை  சொல்லியபடி நிறைவேற்ற தயார் ஆனால் எதிகட்சிகள்தான் ஒத்துழைப்பு தரவில்லை 
எனவே அடுத்து கூட்டத்தில்கண்டிப்பாக 
லோக்பால் மசோதா சட்டமாக கொண்டுவருவோம். 

எல்லோருக்கும் பெப்பே !

எல்லோருக்கும் பெப்பே !

பாரத பிரதமர் தமிழ் நாடு விசிட் 

ஜெயலலிதா வரவேற்று 16 பக்கம் மகஜர்


கலைஞர் அவர் குழாமுடன் முல்லை பெரியார் குறித்து சந்திப்பு


புரட்சி கலைஞர் கறுப்பு கொடி ஆர்பாட்டம் 


மாநிலம் முழுவதும் பிரதமருக்கு எதிராக ஊர்வலம் 

எல்லாவற்றிற்கும் பிரதம மந்திரிபதில் என்ன ?

செவிடன் காதில் ஊதிய சங்கு 


அவர் என்ன செய்வார் பாவம்?

அவரால் என்ன செய்ய முடியும்?

அவர் ஒரு மனு வாங்கும்இயந்திரம் அவ்வளவுதான்

இந்த அவமானத்திர்க்கெல்லாம்   யார் காரணம்?


என்ன காரணம்

பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்

தமிழர்களிடம் ஒற்றுமை அன்றும் கிடையாது
இன்றும் கிடையாது என்றும் கிடையாது 
அதனால் அவனுக்கு தாய் நாட்டிலும் மரியாதை கிடையாது 
அண்டி பிழைக்கும் நாட்டிலும் மரியாதை கிடையாது

பிறவி அடிமைகள்  

Monday, December 26, 2011

பாரதியின் வரிகள் அன்றும் இன்றும்

பாரதியின் வரிகள் 


அன்று. பாருக்குள்ளே நல்ல நாடு 




இன்று. BAR ருக்குள்ளே நமது நாடு 



Sunday, December 25, 2011

அன்னாவுக்கு அருமையான வாய்ப்பு

அன்னாவுக்கு அருமையான வாய்ப்பு 

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது

இதில் அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன

எல்லா மாநிலங்களிலும் தற்போது ஆட்சி செய்யும்
கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன

எனவே அண்ணாஜி அவர்கள் 
இந்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொண்டு 
ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை 
தீவிரமாக செய்து 
சுயேச்சையாக 
வேட்பாளர்களை நிறுத்தி 
இந்த ஊழல் கட்சிகளை
மண்ணை கவ்வ செய்தால் 
இந்த இயக்கம் நன்றாக 
வலுப்பெறுவதோடு 
மற்ற மாநிலங்களில் ஆளும் 
ஊழல் பெருச்சாளிகளை 
வர இருக்கின்ற 
மக்களவை தேர்தலில் 
விரட்ட நல்லொதொரு 
வாய்ப்பாக அமையும் 

உண்ணாவிரதம் இருப்பதால்
தற்போது ஒன்றும் பயன் விளையாது

ஊழலை ஒழிக்க மக்களுக்கு 
விழிப்புணர்வு ஏற்கெனவே வந்துவிட்டது 
அதை சரியான வழியில் நெறிபடுத்த வேண்டும் 
அதற்க்கு தேர்தலில் வேட்பாளர்களை 
நிறுத்துவதுதான் சிறந்த வழி 

இருக்கின்ற சட்டங்களே சரிவர 
பயன்படுத்தபடுவதில்லை
அமல்படுத்த படுவதில்லை 
மக்களும் சட்டத்தை மதிப்பதில்லை 
அனைவரும் சட்டத்தை மீறி
போராட்டங்கள் தினமும்
நடத்திகொண்டிருக்கின்றனர் 
வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள்
தேவைகேற்ப வளைத்து அதை 
செயல்படாமல் தடுக்கின்றனர் 


உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுகளை 
மாநில அரசுகளும் மதிப்பதில்லை 
கீழ் நீதிமன்றங்களும் மதிப்பதில்லை

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது
உயர் நீதி மன்றங்கள் மறு ஆய்வு செய்கின்றன


மக்களின் நலனுக்காக போடப்பட 
எத்தனையோ சட்டங்கள் ஆளும் அதிகார 
வர்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன 

இந்நிலை மாறாமல் புதிய சட்டங்களை
நிறைவேற்றுவதால் 
எந்த பயனும் இல்லை. 



யார் அந்த வைத்தியன்?

இந்திய மக்களுக்கு எதிரிகள் யார்?

இந்திய மக்களுக்கு எதிரிகள் அவர்கள்
தங்களை ஆள தேர்ந்தெடுக்கும்
மக்கள் பிரதிநிதிகளே

தேர்ந்தெடுத்த பின் அவர்களை அயிந்து ஆண்டுகள்
தங்களை ஏமாற்றி கொள்ளையடிக்க லைசென்ஸ்
கொடுப்பதும் அவர்களே

இப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி
அயோக்கியர்களை தேர்ந்தெடுத்து தங்களை சுரண்டி
வாழுமொரு மாபெரும் கூட்டத்தையே உருவாக்கி கொண்டதுதான்
இன்று அவர்கள் கண்ட பலன்

தேர்தல்போது நாய்க்கு வீசும் எலும்பு துண்டுகள் போல் .காசு, இலவசங்கள் போன்றவற்றை பெற்றுக்கொண்டு தொடர்ந்து துன்பம் அனுபவிப்பதையே
இன்பமாக கருதும் இந்திய மக்களை யார் மாற்றுவது?
தவறும் செய்யும் அரசியல்வாதிகளை யார் திருத்துவது?

யாராவது ஊழலை பற்றி வாய் திறந்தால் போதும் அவர்கள் மீது சரமாரியாக
பல் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி  மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து மக்களை யார் காப்பாற்றுவது?

லஞ்சம் கொடுத்தே பழகிப்போன மக்கள்,அதை வாங்கியே கொழுத்த
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் அரசையும் மக்களையும் பலவிதங்களில் ஏமாற்றி கோடி கோடியாய் சுருட்டும் வணிகர்களும், வணிக நிறுவனங்களும் ,என இந்தியா முழுவதும்
புற்றுநோய் பரவிவிட்டது

இன்று இந்திய நோயாளியின் உடலில் உயிர் இருக்கிறது
நோயை குணபடுத்த சரியான சுயநலமற்ற
உறுதியான நல்ல மனம் கொண்ட வைத்தியன் தேவை
யார் அந்த வைத்தியன்?
 



Saturday, December 24, 2011

Corrupt and the Correct



OK
But not Indiyan Businessmen and the Politicians 
who are controlling the Parliament and the Indian people 

Friday, December 23, 2011

புத்தாண்டு சிந்தனைகள்

புத்தாண்டு சிந்தனைகள் 

2012புத்தாண்டை வரவேற்க இந்த உலக மக்கள் தயாராகிகொண்டிருக்கிறார்கள்

3112.2011இரவு பன்னிரண்டு மணி அடித்தவுடன்
புத்தாண்டு கோலாகலமாக பிறந்துவிடும்

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து நடைபெறுகிறது
ஒருவொருக்கொருவர் வாழ்த்து சொல்லிகொள்வதில் தவறில்லை

ஆனால் தண்ணியடித்துவிட்டு தறி கெட்டு அலைவது
நம் இந்திய கலாசாரத்திற்கு தேவையா
என்பதுதான் கேள்வி?

It is a new life everyday என்றார்  James Allen

அதைதான் பாரதியும் இன்று புதிதாய் பிறந்தோம் 
என்று ஒவ்வொரு நாளையும் புதிதாக கருதி வாழ சொன்னான்
இந்த வாழ்க்கை இறைவன் நமக்களித்த பொக்கிஷம் 
நல்வாய்ப்பு,வரம், கொடை

அதை நாம் ஒழுங்காக நல்ல முறையில் வாழ்கிறோமா என்பது கேள்விக்குறியே 

நம் வாழ்வை,சமூகத்தை சிதைக்கும் குடி பழக்கம், 
போதை பழக்கம், பிறர் குடியை கெடுத்தல்
,குழந்தை தொழிலாளர்களை  வேலைக்கு வைத்தல்
,பிறரை வஞ்சித்தல்,பிறரை ஏமாற்றுதல்,லஞ்சம் வாங்குதல்,
 பிறரை சொல்லால்,உடலால்,துன்புறுத்துதல்
பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி 
அவர்களின் வாழ்வை சுரண்டுதல் 
சுற்றுபுறத்தை பாழ்படுத்துதல்,
பொது சொத்துகளுக்கு ,தீங்கு ஏற்படுத்துதல், 
நீர் நிலைகளை மாசு படுத்தல்
போன்ற தீய பழக்கங்களை 
அறவே தவிர்ப்பேன் என்று 
ஒவ்வொரு மனிதனும்
இந்த புத்தாண்டில் சபதம் 
மேற்கொள்வானானால்
இந்த புத்தாண்டு 
இந்த உலக மக்களுக்கு 
உண்மையிலேயே இனிமையாக 
புத்தாண்டாக இருக்கும் 

அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்ளுதல்,
துன்புற்றோர்க்கு  உதவுதல் 
ஆலயம் சென்று அனைவரின்
நலனுக்காக பிரார்த்தனை செய்தல் போன்ற 
நல்ல செயல்களை செய்யும் வழக்கத்தை
இந்த ஆண்டிலிருந்து தொடங்கலாமே 

அதை விடுத்து கோடிகணக்கான ரூபாய்க்கு
குடித்து கும்மாளம் போட்டு கூத்தடித்து 
புத்தாண்டை வரவேற்பதால் யாருக்கு லாபம்?


தேவையற்ற செலவுகள் ,மக்களுக்கும் அரசுக்கும்

உண்மையில் கொள்ளை லாபம் அடைபவர்கள் 
சமுதாயத்தை சீரழிக்கும் 
செல்போன் நிறுவனங்கள்,
விடுதி உரிமையாளர்கள்,
சாராய வியாபாரிகள் 
போன்ற பணமுதலைகளே 

மாற்றம் தேவை .எதற்க்காக?
ஏமாற்றத்தை தவிர்ப்பதர்காகதான் 
வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காகதான்


அண்ணா ஹசாரேவின் சிறை நிரப்பும் போராட்டம்?

அண்ணா ஹசாரேவின் சிறை நிரப்பும் போராட்டம்?

இந்த அறிவிப்பினால் என்ன பயன்?
இதனால் யாருக்கு லாபம்?

ஒரு சிலர் சிறைக்கு சென்றுவிட்டால் நாட்டில் லஞ்சம் ஒழிந்துவிடுமா?

ஒரு சிலர் சிறைக்கு சென்று விட்டால்  முழுமையான லோக்பால் அமைப்பு வந்து நாட்டில் ஒருவரும் லஞ்சமே வாங்கமாட்டார்கள் என்ற நிலை வந்து விடுமா?
,
 நாட்டில் உள்ள அனைத்து அயோக்கியர்களும் சிறைக்கு செல்வதுடன் அவர்களின் சொத்துக்களும் நாட்டுடைமையாக்க படுமா என்பது கேள்விகுறி?

எல்லோருக்கும் லஞ்சமில்லா இந்தியா தேவை என்பதில் மாற்றுகருத்து எதுவுமில்லை

லஞ்சம் வாங்குபவர்களும், லஞ்சம் கொடுப்பவர்களும் தவிர

லஞ்சம் வாங்குபவர்கள் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை இருக்கிறார்கள்

ஒரு சிலர் பிறருக்கு தெரிந்து வாங்குகிறார்கள்
பலர் பிறருக்கு தெரியாமல் வாங்குகிறார்கள்

மாற்றம் மக்கள் மனதில் முதலில் வரவேண்டும்
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவுகளும்
எதிர்பார்த்த  பலனை தராது என்பதை
நடுவு நிலையில் உள்ளவர்கள் அறிவர்

இந்த ஹசாரே இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மிஸ்டர் பரிசுத்தம்தானா என்று யார் சான்று கொடுப்பது?

இந்த இயக்கம் நடத்த
இவர் லட்ச கணக்கில் பணம் செலவு செய்கிறாரே
இந்த தொகை எப்படி வந்தது?
யார் கொடுக்கிறார்கள்?
என்று ஆளும் கட்சியினரும்
இந்த இயக்கத்தை எதிர்க்கும் சிலரும்
கேள்வி கேட்கிறார்கள்

மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்களும்
இவர் நடத்தும் போராட்டங்களும்
ஒன்றாகிவிடுமா?

எளிமையாக வாழ்ந்த காந்தி எங்கே ?
தன் நாட்டிற்காக அவருடன் உயிர்,உடமைகள்,சொந்த பந்தங்கள் அனைத்தையும் துறந்து அவர் வழி நின்ற தியாகிகள் எங்கே?

இன்று அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தையும்  கேலிக்குரியதாகிவிட்டனர் நம் நாட்டை ஆளவந்த
நம் நாட்டு கொள்ளையர்கள்


தாம் கொள்ளையடிப்பது போதாது 
என்று மக்களையும் அந்த பாதையை 
பின்பற்ற வைத்துவிட்டார்கள்

அந்நிய பொருட்கள் ஏற்க மறுத்தல் ,பொது வாழ்வில் சுயநலமின்றி செயல்படுதல் நேர்மையாக வாழ்தல்  தீண்டாமை, மது உண்ணாமை ,கிராம முன்னேற்றம், இந்திய சிறு தொழில்களுக்கு ஆதரவு கொடுத்தல், போன்ற அவரது திட்டங்கள் அனைத்தும் இன்று அவருடன் மண்ணோடு மண்ணாகி   போய் விட்டன

மக்கள் திருந்தாத வரையில் எந்த சட்டமும்
சட்ட புத்தகத்தில்தான் இருக்கும்
நடைமுறைபடுத்த முடியாது

காந்தி குல்லாய் போட்டு கொண்டுவிட்டால் மட்டும்
அனைவரும் காந்தியாகிவிடமுடியாது

 மக்கள் மனதில் சுயநலமும், பேராசையும் இருக்கும்வரை
லஞ்சத்தை ஒழிக்க முடியாது


வாக்களிக்க லஞ்சம் வாங்கும் மக்கள் 
லஞ்சத்தை ஒழிக்க போராடுவதாக கூறுவது 
கேலிக்குரியது 


தினம் தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் 
லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களைபிடித்தாலும் அந்த துறைகளில் 
லஞ்சம் வாங்க புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து 
லஞ்சம் வாங்குகின்றனர் 


திறந்த வெளி நிர்வாகம் என்று சட்டங்கள் இருந்தாலும் 
அவைகள் இன்னும் நடைமுறை படுத்த படவில்லை
அதற்க்கு ஆளும் அரசுகள் தயாராக இல்லை


கிராம சபைகளுக்கு சட்டத்தில் அனைத்து அதிகாரங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கினாலும் அவைகளுக்கு அதன்படி செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை


அனைத்து அதிகாரங்களும்  இன்னும் அரசிடமே உள்ளது 


பொதுவாழ்வில் எங்கும் சுயநலம்தான் 


எதிலும் தனக்கு ஆதாயம் கிடைக்கவேண்டும் என்று இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் ( குடி போதையில் )எதிர்பார்க்கிறான்


தனி மனிதன் முதலில் திருந்தவேண்டும் 


திருந்திய சமுதாயம்தான் நல்ல ஆட்சிக்கு வித்திடும் 
இப்போது உள்ள சமுதாயம் எல்லாவற்றையும் விற்று தின்றுவிடும் 

மக்கள் மனதில் நேர்மையாக வாழும் எண்ணம் வளர
அவர்கள் பயிற்றுவிக்க பட வேண்டும்

அவர்கள் நல்லவர்களை மட்டும் தங்களை ஆள தேர்ந்தெடுக்க
வலியுறுத்தபடவேண்டும்

அறுதி பெரும்பான்மையில்லாத ஒரு அரசையும், அதை நடத்துகின்ற கட்சியையும்,இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளையும் கொண்டு
அனுதினமும் அமளியில் முடியும் அமைப்பை கொண்டு இந்த மசோதாவை
அவசர அவசரமாக சரியாக ஆலோசிக்காமல் நிறைவேற்ற நிர்பந்திக்கும்
அன்ன ஹசாரேவின் முயற்சி உரிய பலனை தராது .

முதலில் மக்கள் மனதில் லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பது கீழ்த்தரமான அவமானகரமான செயல் என்பதை மக்கள் மனதிலும் இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகள் மனதிலும் பதிய வைக்க அன்னா ஹசாரே முயற்சி செய்யட்டும்

தற்போது இருக்கின்ற சட்டங்களே அயோக்கியர்களை தண்டிக்க போதுமானது


அந்த அமைப்புக்களில் காலதாமதமில்லாமல் விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டித்து  அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற சில திருத்தங்களை கொண்டு வந்தால் போதும்


ஒரு நீதிமன்றம் பல ஆண்டுகாலம் குற்றவாளிகளைவிசாரித்து தண்டனை வழங்கிவிட்டால் மேல்முறையீடு செய்ய வழி வகுக்கும் கேலிக்கூத்தான நடைமுறை நீக்கபட்டாலே போதும் இன்று பல குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது

அதை விடுத்து புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவந்து அதற்க்கான நடைமுறைகளை செயல்படுதுவதற்க்குள்
இந்த சட்டம் நீர்த்துபோயவிடும் என்பதில் சந்தேகமில்லை

பொது வாழ்வில் வருபவர்களுக்கு குற்ற பின்னணி  இருந்தால் அவர்களை போட்டியிட தடுக்கும் சட்டம் கடுமையாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலே போதும் இன்று இருக்கும் பெரும்பாலான அரசியல் வாதிகளும் அடுத்த தேர்தலில் நிற்க முடியாது


நாட்டில் விலைவாசிஉயர்வு, சமூக விரோதிகளின்  அட்டகாசம், நேர்மையற்ற தலைவர்களின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில்
உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள சிறை செல்ல கோரி மக்களை தூண்டுவது
அவர்களுக்கு துன்பத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும்.

மக்களிடையே லஞ்சம் கொடுப்பது தவறு என்றும் தான் அதை செய்ய மாட்டோம் என்று உறுதியாக நிலைபாட்டை மேற்கொள்ள வைத்துவிட்டால்
போதும் எந்த  சட்டங்களும் தேவைபடாது

அன்னா ஹசாரே முதலில் மக்களை அந்த உறுதி மொழிஏற்க வைக்கட்டும்  அதுதான் அவருக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது
.
அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை  ஏற்படாமல் ஒரு மசோதாவை நிறைவேற்ற நிர்பந்திப்பது நம் நாட்டு ஜனநாயகத்தையே அழித்துவிடும்
அதன் நோக்கமும் உண்மையான பலன்களை தராது .

Thursday, December 22, 2011

முல்லை பெரியார் போராட்டம் எதை நோக்கி செல்கிறது?

முல்லை பெரியார் போராட்டம் எதை நோக்கி செல்கிறது?

முல்லை பெரியார் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது
சில மாவட்டங்களில் இருந்த போராட்டம் இப்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது

கேரளா அரசு எதையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களை மென்மேலும்
ஆத்திரமூட்டும் செயல்களை செய்து வருகிறது

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டும் அவ்வாறுஒன்றுமே நடைபெறவில்லை என்று கேரளா அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் மறுத்துவருகிறது

தமிழ்நாட்டில் தினமும் ஆயிரகணக்கான மக்கள் கேரளா எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்
காவற்துறையினர் அவர்களை கட்டுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வன்முறையில் முடிகிறது

இந்த பிரச்சினையில் பலமுறை கேரளா முதல்வரும் அமைச்சர்களும் பிரதம மந்திரியை சந்தித்துள்ளனர்

ஆனால் முன்னாள் மற்றும் இன்றைய தமிழக  முதல்வரோ அமைச்சர்களோ இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி பக்கம் தலை வைத்து படுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் அறிக்கை யுத்தம் செய்து
அதிலேயே திருப்திஅடைந்துவிட்டனர்

இரு மாநிலங்களும் ,மாநில மக்களும் மோதிக்கொள்ளும் நிலையை அடைந்துவிட்ட பின்னும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல்
வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதில் ஏதோ  உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது

தமிழ் நாடு தொடர்புள்ள எந்த பிரச்சினைக்கும்,இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் எதிராகவே செயல்படும் மத்திய அரசு இந்த பிரச்சினையிலும்  சாதகமான முடிவு எடுக்கும் என்று நம்புவது முட்டாள்தனம்.

அதே நேரத்தில் தண்ணீர் பிரச்சினைக்காக போராடும் மக்களோடு பல வகையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கும்  தமிழக பிரிவினைவாதிகளும் கை கோத்து நிற்பதற்கும் இந்த பிரச்சினைவழி வகுத்துள்ளது என்றால் அதில் வியப்பு ஏதுமில்லை

எனினும் அப்பாவி மக்கள் பாதிக்கபடுவது தடுக்க இந்த பிரச்சினை விரைவில் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் 

Tuesday, December 20, 2011

பூச்சாண்டி காட்டும் உம்மன் சாண்டி

முல்லை பெரியார்?

புதிய அணை கட்டிதான் தீருவோம்
ஆனால் பேச்சு வார்த்தைக்கு தயார்.-
பூச்சாண்டி காட்டும் உம்மன் சாண்டி-செய்தி

கடவுளின் தேசம் என்று தனக்குதானே
பெயர் சூட்டிக்கொண்டு வீண் பெருமை
பேசிவருபவர்கள் கேரளத்து மலயாளிகள்

ஆனால் அங்கு வாழும் தெய்வங்கள்
எல்லாம் குட்டிசாட்டான் போன்ற
சிறு தெய்வங்கள்தான்

பில்லி ஏவல் சூனியம் என மக்களை
ஏமாற்றி வாழ்வை நாசமாக்கும்
மாந்திரீகர்கள்  நிறைந்த காட்டுவாசிகள்

கேரளம் அரக்கர்கள் வாழ்ந்த பூமி
என்பதற்கு சான்று அங்கு மகாபலி
என்ற அரக்கன் வாழ்ந்ததே சான்று

அவன் இந்த உலகத்திற்கு தீங்கிழைததால்தான்
அவனை பாதாள லோகத்திற்கு
அனுப்பி வைத்தார் மகா விஷ்ணு

அங்கிருந்து கிளம்பிவிட்டால் அவன் மீண்டும்
வந்துவிடபோகிறான் என்று அங்கேயே
தங்கிவிட்டான் குருவாயுரப்பன்

கேரளா மண்ணில் மகிஷிகள் போன்ற அரக்கிகள்
வாழ்ந்த நாடு .அவளை அழிக்க வந்த
ஐயப்பன் அங்கேயே தங்கிவிட்டான்

எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அதை
அப்படியே மறந்துவிட்டு தீமை செய்பவர்களே
அரக்கர்கள் ,அதைபோல்தான் இன்று
நடந்துகொள்கிறார்கள் அங்குள்ள
கேரளா ஆட்சியாளர்கள்

தமிழகத்திலிருந்து அனைத்தையும் பெற்று
வயிறார உண்டு களிக்கும் அவர்கள்
தமிழர்களின் வயிற்றில் அடிக்கும் நன்றி
கெட்ட செயலை அந்த அப்பன்கள்தான்
கண்டிக்கவேண்டும் தண்டிக்கவேண்டும்

இதுபோன்ற பாவிகளிடமிருந்து
இரு மாநில அப்பாவி பொதுமக்களை
காக்க அந்த தெய்வங்கள்தான்
துணை புரியவேண்டும் 



Sunday, December 18, 2011

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருக்கு தேவை உங்கள் அறிவிப்பு ?

முல்லை பெரியார் அணையை உடைத்துவிட்டு
புதிய ஆணை கட்டினாலும் தமிழகத்திற்கு உரிய  தண்ணீர் தர
சட்டம் இயற்றுவோம்-
உம்மான் சாண்டி- பெங்களூருவில் அறிவிப்பு

யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு?
யாருக்கு தேவை உங்கள் அறிவிப்பு ?

வருண பகவான் நினைத்தால்
எங்கள் வயிறு தானாகவே நிரம்பிவிடும்
அதை நிரப்ப இங்கிருக்கும் அரசுகள்
முயற்சி செய்தால் 

அரசியலமைப்பு  சட்டத்தின் கீழ் அமைக்க்கபட்ட உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பையே துச்சமென தூக்கி எறிந்த கேரளா அரசின் இந்த பேச்சை யார் நம்புவது?


உங்கள் நோக்கம் என்னவென்று
அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது

தமிழ்நாடு முழுவதும் தங்க நகைகள் மீது கடன் தர
கேரளா நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் ஒரு பக்கம்

மறு பக்கம் அந்த நகைகளை ஏலத்தில் எடுத்து அதை அதிக விலையில் தமிழக மக்களுக்கே விற்கும் கேரளா தங்க நகை கடைகள் ஒருபக்கம்

இதற்க்கு விளம்பரம் செய்ய தமிழ் நாட்டு நடிகர்களை பயன்படுத்தும்
உங்கள் யுக்தி

உங்கள் குறுக்கு புத்தி தமிழனுக்கு சுட்டு போட்டாலும்  வராது


என்ன செய்வது?

இப்போதாவது உங்களை புரிந்துகொண்டார்களா தமிழர்கள்
என்றால் அதுதான் இல்லை
.
ஆனால் தற்போது மட்டும்
இனிமேல் நீங்கள் என்ன சொன்னாலும் செய்தாலும்
அது எடுபடாது




அமைதி பூவாய் இருந்த தமிழர்களை பூகம்பமாக மாற்றியது யார்?

சாத்தான் வேதம் ஓதுகிறது

மலயாளிகள் மீது தாக்குதல்-நடவடிக்கை எடுங்கள்
உம்மான் சாண்டி கடிதம்
செய்தி

இந்நிலைக்கு யார் காரணம்?

அமைதி பூவாய் இருந்த தமிழர்களை பூகம்பமாக மாற்றியது யார்?

எவ்வளவு அவமானங்கள் நடந்தாலும் பொறுமை காத்து
கேரளா மக்களுக்கு ,உண்ண உணவு,இறைச்சி,பால், காய்கறி
தந்தனர் தமிழ் மக்கள்
என்றும் இருக்க வீடு கட்ட தம நாட்டு ஆறுகளிலிருந்து
மணலை திருடி உனக்கு கடத்தி கொடுத்தும்
ஏழைகளுக்கு அளிக்கும் இலவச அரிசியினை
லாரி லாரியாக கேரளத்திற்கு
கடத்தி உதவி செய்ததற்கு நன்றியாக
முல்லை பெரியாறு அணையை உடைக்க
தீர்மானம் போட்ட கேரளா அரசின் நடவடிக்கைதான்
இதற்க்கு காரணம்

கேரளா அரசின் நன்றி கெட்ட செயலை இப்பொழுதாவது
தமிழர்களுக்கு உணர வைத்த உம்மன் சாண்டிக்கு நன்றி

இந்திய நாட்டின் மாநிலமாக இருந்துகொண்டு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது செயல்படும்
கேரளா மாநிலம் இனி தனி மாநிலமாக இருக்கும் தகுதியை இழந்து விட்டது
அதை தமிழ் நாட்டுடன் இணைத்துவிட்டால் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும்

அய்யப்பன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவன்
அவன்  அள்ளி கொடுக்கும் தண்ணீரை தமிழகத்திலிருந்து
கோடி கோடியாய் வந்து அவனை தரிசிக்கும்
அய்யப்பன்களுக்கு அளிக்காமல் தடுக்க
கேரளத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் ஏது?
 
இந்த அதிகாரத்தை யார் இவருக்கு வழங்கியது?
அதற்க்கு அந்த ஐயப்பனே பதில் சொல்லட்டும்   

கூடங்குளம் குழப்பகுளம் ஆனது என?

கூடங்குளம் குழப்பகுளம் ஆனது என?

மத்திய அரசா அல்லது மாநில அரசா?
இல்லை இரண்டிற்கும் அப்பாற்பட்ட வேறு சக்திகளா?

இந்த உலகத்தில் பிறந்தால் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்
என்பது அனைவருக்கும் பொதுவான விதி

இயற்கையின் சக்திக்கு முன் மனிதனின் எந்த சக்தியும்
தோற்றுத்தான் போகும்

அணுஉலை பாதுகாப்பானது என்று மத்திய அரசு கூறுகிறது
அது பாதுகாப்பில்லை என்கிறது எதிர்ப்பு குழு

அணு உலை வேண்டும் என்கிறது ஆதரவு குழு

பேச்சு வார்த்தைகள் வடிவேலு சொல்வதுபோல்
வெறும்  பேச்சாகத்தான் இருக்கிறது
எந்த முடிவும் எட்டப்படவில்லை

மத்திய அரசு தன்னிச்சையாக அணு உலையை
தொடங்க நாள் குறித்துவிட்டது

எதிர்ப்பு குழு அணு உலையை மூட போராட்டம்
தீவிரமாகும் என்று அறிக்கை விடுகின்றனர்

அணு உலையினால் ஆபத்து வருகிறதோ இல்லையோ
இந்த மோதலில் பலியாகபோவது 
அப்பாவி பொதுமக்களும்
தமிழ்நாட்டின் அமைதியும்தான்

இனி என்ன நடக்கும்?

குழப்பம் எப்போது தெளியும் ?

Friday, December 16, 2011

உண்மையான தமிழன் யார்?

உண்மையான தமிழன் யார்?

மலையாளி என்றால் அவன் எங்கிருந்தாலும் ,எந்த பிரிவை சார்ந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் மலையாளியாக்தான் இருக்கிறான்

ஆனால் தமிழனோ ஈழ தமிழன்,மலேசிய தமிழன், கேரளா தமிழன் என இருக்கும் இடத்தின் பெயர்  இணைத்துதான் அறியபடுகிறான்

இதில் போதாகுறைக்கு உயர்சாதி,தாழ்த்தப்பட்டவர்கள்,மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர்,ஆத்திகர்கள்,நாத்திகர்கள், எந்த பிரிவிலும் சேராதவர்கள் என ஒருவரைஒருவர் எதிரியாக பார்க்கும் மனப்பான்மை வேறு

போதாகுறைக்கு தமிழனில் பல மொழி கலப்பு,இன கலப்பு, ஜாதி கலப்பு,அரசியல்கலப்பு,மத கலப்பு என எண்ணிலடங்கா பிரிவுகள்
ஒரு தலைவன் சொல்லுவதை மற்ற தலைவன் ஏற்றுகொள்ளுவதில்லை
அதைபோல் அவர்களை பின்பற்றும் ஆதரவாளர்களும் அப்படியே

தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டனைவர்களும் தமிழர்களாக
அங்கிகரிக்கும் மனப்பான்மை வளரவேண்டும்
எத்தனை உள் வேறுபாடுகள் இருந்தாலும் அத்தனையும் மறந்துவிட்டு
பொதுநலனுக்காக தமிழர்கள் இணைந்தால்மட்டுமே தமிழனுக்கு எதிர்காலம் உண்டு

தமிழன் தங்களுக்குள்ளேயே ,தங்களுக்குதானே
குழி வெட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்
நமக்குள் கருத்து வேற்றுமை இருக்கலாம்

ஆனால் அது நம்மையே கருவறுக்கும்
அருவறுக்கும் நிலமைக்கு செல்வதை
இனியாவது தவிக்க வேண்டும்

நம்மை நாமே எத்தனை  நூற்றாண்டுகள்
தாழ்வாக விமரிசித்து பிறரின்
கேலிபோருளாக ஆகவேண்டும்
.
குறையில்லாத மனிதனில்லை
குறை காண்போரிடமும் குறைகள் உண்டு
கடந்தகால கறை படிந்த வாழ்க்கையுண்டு
குறைகள் நிறைந்த இவ்வுலகில்நிறைகளை
காண முயற்சிப்போம்
உண்மைகளை உணர் முற்படாது
உணர்ச்சி வசப்பட்டு தமிழர்களையும்
தமிழ்நாட்டையும்
சிதைத்தது
போதும் .போதும்

நிகழ்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் கடந்த கால
கசப்பான் நிகழ்வுகளை மறப்பதுதான் அனைவருக்கும் நல்லது
அதை விடுத்து அதையே தோண்டி துருவி பகைமையை
வளர்ப்போர் தமிழ் மக்களுக்கு  செய்யும் தொண்டாகாது
அது அவர்களுக்கு தானே வைத்துகொள்ளும் குண்டு

இந்த அடிப்படையில் விட்டுகொடுத்து அனைத்து தமிழர்களும்
தங்கள் மனதை விரிவாக்கி இணைந்தால்தான் தமிழர்கள் உலக அரங்கில் பாதுகாப்பாக வாழ முடியும்

இல்லையேல் உலகில் எங்காவது தமிழ் ஆடுகள் பாதிக்கப்படும்போது மற்ற தமிழ் ஆடுகள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கதான் இயலும்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
என்ற பாரதியின் வாக்கு நமக்கு உலக அரங்கில் செல்வாக்கை தேடி தரும் 

முல்லை பெரியார் பிரச்சினை

முல்லை பெரியார் பிரச்சினை

கேரளாவில் தமிழர்கள் தாக்கபட்டு  அடித்து விரட்டப்பட்டனர்-
தமிழகத்தில் மலையாளிகள் நடத்தும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன
தமிழக கேரளா எல்லையில் ஆயிரகணக்கான ஆண்களும் பெண்களும்
குவிந்துள்ளனர்-பதட்டமான சூழ்நிலை

அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம்-மனிதசங்கிலி
கேரளா அரசு புதிய அணை கட்ட உறுதி
தமிழக அரசு உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்


என கவலை தரும் செய்திகள்

why this kolaveri kolaveri di di di

கும்பகர்ணன் போல் இத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டது
தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகள்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்
மிரண்டுவிட்ட மக்களை காவல் துறை பொறுமையாகத்தான்
கையாளவேண்டும்
அனைவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைதி காத்தால்
இரு மாநில மக்களுக்கும் நல்லது 

Thursday, December 15, 2011

இந்திய வங்கிகள் பாதுகாப்பில்லையா?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும்
கருப்பு பணம்-25 லட்சம் கோடி ருபாய் -அத்வானி.

இந்தியர்கள் ஏன் அவ்வளவு பணத்தை
வெளி நாடுகளில் பதுக்கி வைக்க வேண்டும்?
இந்திய வங்கிகள் பாதுகாப்பில்லையா?

இந்திய பணம் இந்தியாவில் இருந்தால்தான்
இந்தியர்களுக்கும் நல்லது
இந்தியாவுக்கும் நல்லது

எனவே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி
அந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய
அனுமதித்தால் இந்திய மக்களுக்கு உதவியாக இருக்கும்

அதை விடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
ஒன்று அந்த பணம் காணாமல் போய்விடும்
அல்லது அந்த விவகாரத்தில் அனைத்து  கட்சிகளுக்கும்
கட்சிகளை நடத்த பணம் கொடுக்கும் பண முதலைகளுக்கும்
ஆபத்தாய் போய்விடும்

எனவே அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்து
வழக்கு போட்டு நடத்தி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ
எவ்வளவு செலவு அரசிற்கு பிடிக்குமோ யாரறிவார்?

மேலும் அவர்களை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன
என்ன தண்டனை கொடுத்தாலும் அவர்களை
காப்பாற்ற ஜெத்மலானி போன்ற
வழகறிஞர்கள் இருக்கிறார்கள்

ஜாமீன் வழங்க அடுத்தடுத்து நீதிமன்றங்கள் இருக்கின்றன
ஆண்டுகள் பல ஓடிவிடும்,அதில் சிலர் மாண்டும் விடுவார்கள்
வழக்கு போட்ட அரசும் இருக்காது

நாளொரு ஊழல் என அரங்கேறிவரும் நம் நாட்டில்
மக்கள் இந்த வழக்கை மறந்தே போய்விடுவார்கள்

எனவே அவர்களை பழி வாங்குவதை விட
அவர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்கி
நம் நாட்டிற்குபயன்படுத்திகொள்வது
என்று சிந்திக்கும் தலைமையே இன்று நம்
நாட்டிற்கு தேவை

புத்திசாலிகளை புத்திசாலித்தனமாக்  பயன்படுத்திக்கொண்டு
நம் நாட்டை முன்னேற்றும்  புத்திசாலி தலைவர்களே
இன்று நம் நாட்டிற்கு தேவை..


Wednesday, December 14, 2011

இந்த குளறுபடிகளை யார் சரி செய்ய போகிறார்கள். ?

இந்தியா ஆங்கிலயரிடமிருந்து 15-8-1947அரசியல் சுதந்திரம் பெற்றது

அதனால் யாருக்கு லாபம்?
அரசியல்வாதிகளும்,கோடிகணக்கில் மக்களை சுரண்டும் தொழிலதிபர்களும் தான் இந்த சுதந்திரத்தின் பயனை நன்கு அனுபவிக்கிறார்கள்

இந்தியாவில் வறுமை நீங்கிவிட்டதா?

பெண்கள் மானத்துடன் வாழ முடிகிறதா?
நகையணிந்து திருடர்களின் பயமின்றி நடமாட முடிகிறதா?
அனைவருக்கும் கல்வி கிடைத்துவிட்டதா?
உழைக்கும் தகுதி படைத்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறதா?
நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதா?
வேலை வாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்த அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டதா?
அணைத்து மக்களுக்கும் அரசியல் சட்டத்தில் உள்ள உரிமைகளும் கிடைத்துவிட்டனவா?
அனைத்து மக்களும் இருக்க இடம்,உடுக்க உடை, சமூக பாதுகாப்பு, வயிறார உண்ண உணவு கிடைத்துவிட்டதா?
தொழில் செய்து வாழ்வில் வளம் பெற கட்டமைப்பு வசதிகள்,தடையற்ற மின்சாரம் உள்ளதா?
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா/?
அனைவருக்கும் நீதி உரிய காலத்தில் கிடைத்துவிட்டதா?
மக்களிடம் உள்ள பலவிதமான ஏற்றதாழ்வுகள் மறைந்துவிட்டதா/
லஞ்ச ,ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகம் நடைபெறுகிறதா?
நாட்டில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டனவா?

எந்த கண்றாவியும் இல்லை

எல்லா இடத்திலும் ஊழல்,எல்லா கட்டத்திலும் ஊழல்,லஞ்சம்
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் அரசுகள் மக்களை ஏமாற்றி
அரசியல்வாதிகள் பகல் கொள்ளையடித்து கொழுக்கவும்  மக்கள் எந்த முன்னேற்றமும்  இன்றி திண்டாடிகொண்டிருக்கிரார்கள்

நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம், அப்பாவி மக்கள் மீது அத்துமீறல்கள், சமூக விரோதிகள் பெருக்கம், வாழ வழியில்லாமல்
சாலை ஓரங்களில் வாழ்வை கழிக்கும் கோடிகணக்கான மக்கள்

கட்டுபடுத்த இயலாத அராஜகம்,விஷம்போல் ஏறி வரும் விலைவாசிகள்
கணக்கி லடங்கா வரிகள், என துன்புறும் மக்களின் வாழ்க்கையைத்தான் இந்த சுதந்திரம் தந்திருக்கிறது.
 .
எங்கு பார்த்தாலும் மக்களின் அதிருப்தி
அதை தங்களுக்கு சாதக பயன்படுதிகொள்ளும் தீவிரவாதிகள்
அவைகளை சரியாக அணுகாமல் சிக்கலாக்கும் அரசுகளின் அணுகுமுறை
இந்தியாவின் அண்டை நாட்டினர் யாருடனும் சுமுகமான உறவில்லை
நம் வெளிஉறவு கொள்கை திடமானதாக இல்லை

இந்த குளறுபடிகளை யார் சரி செய்ய போகிறார்கள். ?

முல்லை பெரி யாரு? பொறுப்பு?

முல்லை பெரி யாரு? பொறுப்பு?

முல்லை பெரியார் பிரச்சினை பல ஆண்டுகளாக சரியாக
கையாளைபடாமல் இன்று பூதாகாரமாக வெடித்துள்ளது
அற்ப காரணங்களுக்காக இந்த பிரச்சினையை கேரளா அரசு
தன குறுக்கு புத்தியை பயன்படுத்தி சிக்கலாக்கி கொண்டிருக்கிறது
வழக்கம்போல் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் தனி ஆவர்தனம் வாசித்து
கொண்டிருக்கிறார்கள்
முல்லை பெரியார் பிரச்சினையை விட நம் அரசியல் கட்சி
தலைவர்கள் உருவாக்கும் பிரச்சினை கேலிக்குரியதாக இருக்கிறது

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்குள் கேரளா அரசு பலவிதமான
நாடகங்களை தினம் தினம் அரங்கேற்றிகொண்டிருக்கிறது

இந்த தாமதத்தினால் தமிழ்நாட்டு அப்பாவி பொது மக்கள்
உணர்ச்சி வசப்பட்டு கலவரங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்
இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்க
ஆரம்பித்துவிட்டது. தூங்கிகொண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க திட்டமிட்ட கேரளா அரசு நினைத்ததை
சாதித்துவிட்டது.இந்த சாக்கை வைத்து எதிர்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பாகிவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் மக்களின் பொறுமையின்மையும்
பொறுப்பற்ற இரு மாநில அரசுகளும்,அற்ப காரணங்களுக்காக
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆளும் மத்திய அரசும்

இந்த பிரச்சினையை இரு அரசுகளும் நேரடியாக பேசி ஒரு சுமுக
முடிவை எட்டாமல் எதற்கெடுத்தாலும் நீதிமன்றங்களையும்,மத்திய அரசையும் நாடுவது மக்கள் நலனில் அக்கறையில்லாத மாநில அரசுகளின்
விவேகமற்ற செயல் என்றே கருதவேண்டும்

.

Monday, December 12, 2011

அது ஏன்?
எனக்கு புரியவில்லை

இந்திய கடற்படை சீன கப்பலை சோமாலிய கடற்கொள்ளையரிடமிருந்து
காப்பாற்றியது.-செய்தி

ஆனால் தமிழக மீனவர்களை (இந்திய மீனவர்கள் அல்ல)இலங்கை கடற்
கொள்ளையரிடமிருந்து இந்திய கடற்ப்படை காப்பாற்ற மறுப்பது  ஏன்?
மாறாக அவர்களுக்கு அறிவுரை சொல்வதும், பாதுகாப்பு தர மறுப்பதும் ஏன்?
தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா?

நம் நாட்டிற்கு எதிராக செயல்படும் சீன மக்கள் மீது பாசம் காட்டும் இந்திய கடற்படை நம் நாட்டிற்க்கு கோடி கோடியாக வரிகள், அந்நிய செலாவணி ஈட்டி தரும் மீனவர்கள் மீது ஏன் அக்கறை கொள்ள வில்லை?

தமிழர்கள் பெரிய புராணத்தில் வரும் சுந்தரர் போல் பிறப்பால் அடிமைகளோ?
இறைவனுக்கு அடிமையாகலாம் தவறில்லை
முக்தியாவது கிடைக்கும்
ஆனால் எல்லோரும் தமிழனை அடிமைகள் வாய் செத்த பூச்சிகள் என்று
எண்ணிகொண்டிருக்கிரார்களே இதற்க்கு என்ன பொருள்?

தமிழனை மற்றவர்கள் ஏமாற்றுவது  இருக்கட்டும் அது அவர்களின் புத்திசாலித்தனம்.நமக்கு இருப்பதாக நாம் நினைத்துகொண்டிருக்கும்
அது நமக்கு கிடையாது

நமக்கு உணர்ச்சிகள்தான்  முக்கியம்.அதை பயன்படுத்தி சிறிது காலம் ஸீன் காட்டிவிட்டு எல்லாவற்றையும் கொளுத்தி,உடைத்து போட்டுவிட்டு  மீண்டும் டாஸ்மாக்அல்லது வீடு அல்லது சிறை  சென்றுவிடுவோம்

உண்மைகளை உணர்ந்துகொண்டு என்று திருந்தும் தமிழ் சமுதாயம்

விவசாயிகளை எந்த அரசும் வாழ்த்துவதும் இல்லை
அவர்களை வாழ வைப்பதும் இல்லை

மாறாக அவர்களை அலைகழிக்கின்றன
நாமெல்லாம் பசியில்லாமல் வாழ அவர்கள்
செய்யும் தியாகத்தை கொச்சைபடுதுகின்றன
மாநில அரசுகளும் மத்திய அரசும்

விவசாயி மழையை நம்பி தான்
விவசாயம் செய்கிறான்
பசுந்தாள் உரத்தை நம்பி விவசாயம்
செய்து வந்தவனை ரசாயன உரத்தை நம்பி
அவனை நாசமாக்க திட்டம் தீட்டி
இன்று அதையும் நம் நாட்டில் உற்பத்தி செய்யவும் முடியாமல்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் முடியாமல்
தடுமாறும் அரசுகள் விவசாயிகளை அலைகழிக்கின்றன

தரமான விதைகளை உரிய காலத்தில் வழங்க
ஏற்பாடு செய்வது கிடையாது

பயிருக்கு தேவையான முறையான
நீர்பாசன வசதிகளை செய்து தருவது கிடையாது

தங்கு தடையற்ற சீரான மின்சாரம் தருவதற்கு
உத்தரவாதம் கிடையாது

நன்றாக பயிர் விளைத்தால் சேமித்து வைக்க
கிடந்குகளோ,பதபடுத்தும் நிலையங்களோ
கிடையாது

சரக்குகளை சேமித்து நல்ல விலையில்விற்க
சந்தைபடுத்த நல்ல அமைப்புகள் கிடையாது

வெள்ளம் வறட்சி போன்ற எதிர்பாராத
ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற காப்பீட்டு வசதி
கிடையாது

முக்கியமாக இடை தரகர்களின் அட்டூழியத்திலிருந்து
அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை

உற்பத்தி செய்யும் விவசாயிக்கு
விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை

கூட்டுறவு சங்களை அரசியல் தலையீடின்றி நடத்த
எந்த அரசும் ஒப்புகொள்வதில்லை

பயிர்கடன்கள் உரிய காலத்தில் அளிக்கபடுவதில்லை
தண்ணீர் இல்லை ,சீரான மின்சாரம் இல்லை
இலவச மின்சாரம் இலவச மோட்டார் வழங்கி என்ன பயன்?

கடனையும் வட்டியையும் தள்ளுபடி செய்வது வெறும் விளம்பரத்திற்கு மட்டுமே
தனியார்களிடம் வாங்கிய கடனை யார் அடைப்பது?

இந்தியா முழுவதும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயிகளின்  அவல நிலையை யார் போக்குவது ?

எவ்வளவோ தொல்லைகள் இருந்தும் விவசாயி
அதனை துன்பங்களையும் தாங்கி பயிர் தொழிலை
செய்துவருகிறான்
.
இதற்கெல்லாம் ஒரே வழி விவசாயிகளின் விளைபொருளுக்கான
விலையை இடைதரகளின்றி அவர்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கபடவேண்டும்

அவர்கள் உள்ளூர் சந்தைகளில் விற்றது போக மிகுதியை அரசு
கொள்முதல் செய்து விற்றுகொள்ளட்டும்

பொருட்கள் பாழாகாமல்தடுக்க  குளிர் பதன வசதிகளும் சேமிப்பு
கிடங்குகளும் அமைத்து தருதல்

விவசாயத்திற்கு தொடர்பில்லாத அரசியல்வாதிகளை
கூட்டுறவு சங்கங்களிருந்து அப்புரபடுதுதல்

நாட்டின் தேவைக்கேற்ப ,இடம் தண்ணீர் தேவைகேற்ப
உணவுபொருட்களை பயிரிட வழி வகுத்தல்

ஏரிகள்,குளங்கள்,கால்வாய்கள் ,நதிகளில் தடுப்பணைகள்
கட்டுதல் ஆகியவற்றால் நீரை சேமித்து சீராக விவசாயிகளுக்கு நீரை வழங்க
ஏற்பாடுகள் செய்தல்

கட்டுமானங்களில் தரமற்ற ஒப்பந்தகாரர்களை ஒழித்து
அந்த பகுதி விவசாயிகள் குழுக்களின் கண்காணிப்பில் தரமான
பணிகளை செய்ய அனுமதித்தல்

பயிரிடும் விவசாயிக்கு நிலங்களை உரிமையாக்குதல்
அனைத்து மட்டங்களிலும் விவசாயிகளை பயன்கள் சென்றடையாமல் தடுக்கும் ஊழலை களைதல்

நம் நட்டு விவசாயிகளின் வாழ்க்கையை பாதிக்கும்
எந்த கொள்கை முடிவையும் எடுக்காதிருத்தல்

இவைகளை செய்யுமா இந்த அரசுகள்?
அறுபது ஆண்டுகளாக நடக்கவில்லை

எனினும் கனவு காண்பதில் தவறு இல்லை
என்றாவது அந்த கனவு ஒருநாள் நனவாகலாம்






Friday, December 9, 2011

வாய் சொல்லில் வீரன் தமிழன்

வாய்  சொல்லில் வீரன் தமிழன்
எப்படி?
அவனால் எந்த பிரச்சினையை தீர்க்க முடிந்தது?
ஈழ தமிழர் பிரச்சனையா?
காவிரி நீர் பிரச்சினையா?
பாலார் வறண்டு பாலைவனமாய் போன பிரச்சினையா?
இல்லை தற்போது இரு மாநிலங்களை ஆட்டி வைக்கும்
முல்லை பெரியார் பிரச்சினையா?
தமிழக மீனவர் பிரச்சினையா/
இன்னும் இது போன்ற பல பிரச்சினைகள் மிக சுலபமாக
தீர்ந்துவிடும்

ஆனால் உண்மையான பிரச்சினையே சுயநலம் பிடித்த
அரசியல் கட்சிகளும் தமிழ் நாட்டின் மீதோ,அல்லது  மக்களின் மீதோ
சிறிதும் அக்கறையில்லாமல் ஆனால் அக்கறையிருப்பதுபோல் காட்டிக்கொண்டு வெற்று அறிக்கைகளையும் வெட்டி போராட்டங்களையும்
நடத்திக்கொண்டு மக்களை ஏமாற்றிகொண்டிருக்கும் ஒரு கூட்டம்தான்

இரண்டாவது எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் தமிழன்
வேகம் வந்த நேரத்திலேயே வெத்து வேட்டாகிவிடும் அவன் உணர்வு

இவர்கள் எந்த காலத்திலும் எந்த பிரச்சினைக்கும் ஒன்று சேரமாட்டார்கள்.

இவர்களால்தான் ஒன்றுமறியாத அப்பாவி தமிழ்மக்கள்
ஏமாற்றபடுகிறார்கள்
உழைக்கும் தமிழர்கள் நன்றாக உழைத்து தமிழ் நாட்டை வளம் கொழிக்க
வைக்கிறார்கள்
ஆனால் அவர்களை சுரண்டி பிழைக்கும் சிறிய அளவிலான கூட்டம்
அவர்களை அவர்களின் உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாத
நிலையில் வைத்துள்ளது மிக கொடுமை

ஒரு சில தலைவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் மோசடி
செய்துகொண்டிருக்கின்றனர்
கேட்டால் சொல்வார்கள்.நாங்கள் கல்வியை இலவசமாகினோம்
வாழ அனைத்து உதவிகளையும் இலவசமாக அரசு சார்பில் அளிக்கிறோம்
மக்கள் முன்னேறிவிட்டார்கள் என்று

மக்களை போதைக்கு அடிமையாகி அவர்களின் உழைப்பினால் கிடைத்த
பணத்தை உறிஞ்சி அவர்களுக்குக் இலவசங்களை அளிப்பதால் என்ன  பயன்?

அரசுக்கு பெருகிவரும்,குற்றசெயல்கள்,மருத்துவம்,,சுகாதார கேடு,
சமூகத்தில் குடும்ப அமைப்புகள் சீர்கேடு ஆகியவற்றால் செலவுகள்
தேவையற்ற ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை
அந்த பணத்தை ஆக்க பூர்வமான வகையில் செலவு செய்ய
வாய்ப்பில்லாமல் போகின்றதை யாரும் மறுக்க முடியாது

உண்மையில் நம் யார் கையையும் ஏந்த அவசியமில்லை
ஒவ்வொரு ஆண்டும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது
மொத்த தண்ணீரும் கடலில் வீழ்ந்து வீணாகிபோகிறது
இந்த வீணாகி போன மனிதர்கள் ஆளும் அரசுகளாலே
.
தண்ணீரை சேமிக்க புதிய நீர்தேக்கங்களோ ,தடுப்பு அணைகளோ ஏந்த அரசுகளும் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை

நிலத்தடி நீர் தேங்க விடாமல் ஆற்று மணலை சுரண்டி விற்று கொள்ளை லாபம் பார்த்ததுதான் இவர்கள்தமிழர்களுக்கு ஆற்றிய உதவி

இருக்கின்ற அனைத்து நீர் நிலைகளையும் அழித்து மட்டுமல்லாமல்
வருடா வருடம் வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை உதவியாக அளித்துவிட்டு அத்தோடு தங்கள் கடமைகளை
முடித்துகொண்டதுதான் இவர்கள் நம்மை ஆண்ட பலன்
.
நம்மை சுற்றி இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் கணக்கற்ற அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து கொண்டனர்
அதையும் மீறி ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
வீணாகி கொண்டிருக்கிறது அதை தடுக்க உருப்படியான  நடவடிக்கை
எடுக்க யாரும் தயாரில்லை
.
பிரச்சினை வரும்போது அறிக்கை விடும் கட்சிகள் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியவுடன் வேறொரு பிரச்சினையை கையிலெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே இந்த ஐம்பது ஆண்டுகளாக காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றன

மின்சாரம் தமிழ் நாட்டில் கிடைத்தும் ,அதை முறையாக பயன்படுத்தாமல்,நிர்வாக சீர்கேடு ,மின்சக்தி கொண்டு செல்வதில் இழப்பு,இலவச மின்சாரம் ,ஊழல் நிர்வாகம் போன்றவற்றால்
தமிழ் நாட்டு மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
.
தமிழ் நாட்டு மக்கள்,சினிமா,சாராயம்,போதை,ஊழல் அரசியல்வாதிகளின் கவர்ச்சி இலவசங்கள் இவற்றில் மயங்கி எதிர்காலம் கேள்விக்குறியாய்
காலத்தை தள்ளுகின்றனர்

மற்ற மாநிலத்தவர்கள் இங்கு தங்கள் புத்தியை பயன்படுத்தி
ராஜபோக வாழ்க்கை வாழுகின்றனர்

தமிழன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு எதையும் சிந்திக்காமல்
வன்முறையில் இறங்கி தன வாழ்க்கையை மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறான்
.
இருப்பவர்களுக்கு ஒன்றும் காணோம்
இன்னும் எத்தனை காலத்திற்கு   பழம் பெருமை கொண்டிருப்பது?

லட்சகணக்கான தமிழர்கள் தங்க இடமில்லாமல் நடைபாதை ஓரம் கிடக்கிறார்கள்
அவர்களுக்கென்று ஒவ்வொரு நகரத்திலும் இரவு தங்க ஒரு இடம்
அமைத்து கொடுக்க எந்த அரசாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?

விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நன்றாக நடைபெற தடையற்ற மின்சாரம்,கட்டமைப்பு வசதிகள் எந்த அரசாவது செய்ததுண்டா?

ஒளிவு மறைவற்ற ஊழலற்ற நிர்வாகம் நடைபெற .அரசியல்,இடை தரகர்கள் தலையீடு இல்லாத நிர்வாகத்தை தர எந்த அரசாவது முய்ற்சிததுண்டா?

ஏழை,நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசியை கட்டுபடுத்த நிலையான
நடவடிக்கை எந்த அரசாவது எடுத்ததுண்டா?

கட்சிகள் ஒன்றுகொன்று வசை பாடுவதும்,ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போடுவதும்,எல்லாவற்றிற்கும் விளம்பரம் தேடுவதுமாக இருந்தால் தமிழ்நாடு எப்போதுதான் உருப்படும்?

தமிழன் எப்போது எல்லா வளங்களும் பெற்று வாழ்வான் ?

சிந்திக்கவே இந்த பதிவு

யாரையும் குற்றம் சாட்ட அல்ல