Friday, February 3, 2017

கடலில் கொட்டிய எண்ணெய் ?

கடலில் கொட்டிய எண்ணெய் ?

கடலில் கொட்டிய எண்ணையை
கையால் வாரும் கையாலாகாத
அரசுகள்.

மைய்ய அரசும் மாநில அரசும்
வழக்கம் போல அறிக்கை
போர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன

கடலை நம்பி வாழும் அப்பாவி உயிரினங்கள்
செத்து ஒதுங்குகின்றன கடற்கரையில்

கடலை நம்பி குடலை வளர்க்கும்
மீனவர்கள் வாழ்வில் மண்ணை
அள்ளிப்  போட்டுவிட்டது இந்த
 விபத்து.

நீர் மேல் மிதக்கும் கசடுகளைக் கூட
அப்புறப்படுத்த வழி வகையற்று
தவிக்கிறது சுத்தத்தைபற்றி
வானளவாக பீற்றிக்கொள்ளும்
ஆளும்  வர்க்கம்.

கடற்க்கரை காற்று அடிக்குது
மிதக்கும் எண்ணெய்  துர்நாற்றம்
குடலை  பிடுங்குது.

நம் நாட்டில்  இந்த பிரச்சினை
தீர போர்க்கால அடிப்படையில்
செயல்பட தொழில் நுட்பம் இல்லையா?
அல்லது அதுவாகவே சரியாகிவிடும் என்ற
மெத்தனமா?

அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.