Thursday, December 22, 2011

முல்லை பெரியார் போராட்டம் எதை நோக்கி செல்கிறது?

முல்லை பெரியார் போராட்டம் எதை நோக்கி செல்கிறது?

முல்லை பெரியார் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது
சில மாவட்டங்களில் இருந்த போராட்டம் இப்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது

கேரளா அரசு எதையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களை மென்மேலும்
ஆத்திரமூட்டும் செயல்களை செய்து வருகிறது

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டும் அவ்வாறுஒன்றுமே நடைபெறவில்லை என்று கேரளா அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் மறுத்துவருகிறது

தமிழ்நாட்டில் தினமும் ஆயிரகணக்கான மக்கள் கேரளா எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்
காவற்துறையினர் அவர்களை கட்டுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வன்முறையில் முடிகிறது

இந்த பிரச்சினையில் பலமுறை கேரளா முதல்வரும் அமைச்சர்களும் பிரதம மந்திரியை சந்தித்துள்ளனர்

ஆனால் முன்னாள் மற்றும் இன்றைய தமிழக  முதல்வரோ அமைச்சர்களோ இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி பக்கம் தலை வைத்து படுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் அறிக்கை யுத்தம் செய்து
அதிலேயே திருப்திஅடைந்துவிட்டனர்

இரு மாநிலங்களும் ,மாநில மக்களும் மோதிக்கொள்ளும் நிலையை அடைந்துவிட்ட பின்னும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல்
வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதில் ஏதோ  உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது

தமிழ் நாடு தொடர்புள்ள எந்த பிரச்சினைக்கும்,இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் எதிராகவே செயல்படும் மத்திய அரசு இந்த பிரச்சினையிலும்  சாதகமான முடிவு எடுக்கும் என்று நம்புவது முட்டாள்தனம்.

அதே நேரத்தில் தண்ணீர் பிரச்சினைக்காக போராடும் மக்களோடு பல வகையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கும்  தமிழக பிரிவினைவாதிகளும் கை கோத்து நிற்பதற்கும் இந்த பிரச்சினைவழி வகுத்துள்ளது என்றால் அதில் வியப்பு ஏதுமில்லை

எனினும் அப்பாவி மக்கள் பாதிக்கபடுவது தடுக்க இந்த பிரச்சினை விரைவில் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் 

No comments: