Friday, December 23, 2011

அண்ணா ஹசாரேவின் சிறை நிரப்பும் போராட்டம்?

அண்ணா ஹசாரேவின் சிறை நிரப்பும் போராட்டம்?

இந்த அறிவிப்பினால் என்ன பயன்?
இதனால் யாருக்கு லாபம்?

ஒரு சிலர் சிறைக்கு சென்றுவிட்டால் நாட்டில் லஞ்சம் ஒழிந்துவிடுமா?

ஒரு சிலர் சிறைக்கு சென்று விட்டால்  முழுமையான லோக்பால் அமைப்பு வந்து நாட்டில் ஒருவரும் லஞ்சமே வாங்கமாட்டார்கள் என்ற நிலை வந்து விடுமா?
,
 நாட்டில் உள்ள அனைத்து அயோக்கியர்களும் சிறைக்கு செல்வதுடன் அவர்களின் சொத்துக்களும் நாட்டுடைமையாக்க படுமா என்பது கேள்விகுறி?

எல்லோருக்கும் லஞ்சமில்லா இந்தியா தேவை என்பதில் மாற்றுகருத்து எதுவுமில்லை

லஞ்சம் வாங்குபவர்களும், லஞ்சம் கொடுப்பவர்களும் தவிர

லஞ்சம் வாங்குபவர்கள் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை இருக்கிறார்கள்

ஒரு சிலர் பிறருக்கு தெரிந்து வாங்குகிறார்கள்
பலர் பிறருக்கு தெரியாமல் வாங்குகிறார்கள்

மாற்றம் மக்கள் மனதில் முதலில் வரவேண்டும்
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவுகளும்
எதிர்பார்த்த  பலனை தராது என்பதை
நடுவு நிலையில் உள்ளவர்கள் அறிவர்

இந்த ஹசாரே இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மிஸ்டர் பரிசுத்தம்தானா என்று யார் சான்று கொடுப்பது?

இந்த இயக்கம் நடத்த
இவர் லட்ச கணக்கில் பணம் செலவு செய்கிறாரே
இந்த தொகை எப்படி வந்தது?
யார் கொடுக்கிறார்கள்?
என்று ஆளும் கட்சியினரும்
இந்த இயக்கத்தை எதிர்க்கும் சிலரும்
கேள்வி கேட்கிறார்கள்

மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்களும்
இவர் நடத்தும் போராட்டங்களும்
ஒன்றாகிவிடுமா?

எளிமையாக வாழ்ந்த காந்தி எங்கே ?
தன் நாட்டிற்காக அவருடன் உயிர்,உடமைகள்,சொந்த பந்தங்கள் அனைத்தையும் துறந்து அவர் வழி நின்ற தியாகிகள் எங்கே?

இன்று அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தையும்  கேலிக்குரியதாகிவிட்டனர் நம் நாட்டை ஆளவந்த
நம் நாட்டு கொள்ளையர்கள்


தாம் கொள்ளையடிப்பது போதாது 
என்று மக்களையும் அந்த பாதையை 
பின்பற்ற வைத்துவிட்டார்கள்

அந்நிய பொருட்கள் ஏற்க மறுத்தல் ,பொது வாழ்வில் சுயநலமின்றி செயல்படுதல் நேர்மையாக வாழ்தல்  தீண்டாமை, மது உண்ணாமை ,கிராம முன்னேற்றம், இந்திய சிறு தொழில்களுக்கு ஆதரவு கொடுத்தல், போன்ற அவரது திட்டங்கள் அனைத்தும் இன்று அவருடன் மண்ணோடு மண்ணாகி   போய் விட்டன

மக்கள் திருந்தாத வரையில் எந்த சட்டமும்
சட்ட புத்தகத்தில்தான் இருக்கும்
நடைமுறைபடுத்த முடியாது

காந்தி குல்லாய் போட்டு கொண்டுவிட்டால் மட்டும்
அனைவரும் காந்தியாகிவிடமுடியாது

 மக்கள் மனதில் சுயநலமும், பேராசையும் இருக்கும்வரை
லஞ்சத்தை ஒழிக்க முடியாது


வாக்களிக்க லஞ்சம் வாங்கும் மக்கள் 
லஞ்சத்தை ஒழிக்க போராடுவதாக கூறுவது 
கேலிக்குரியது 


தினம் தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் 
லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களைபிடித்தாலும் அந்த துறைகளில் 
லஞ்சம் வாங்க புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து 
லஞ்சம் வாங்குகின்றனர் 


திறந்த வெளி நிர்வாகம் என்று சட்டங்கள் இருந்தாலும் 
அவைகள் இன்னும் நடைமுறை படுத்த படவில்லை
அதற்க்கு ஆளும் அரசுகள் தயாராக இல்லை


கிராம சபைகளுக்கு சட்டத்தில் அனைத்து அதிகாரங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கினாலும் அவைகளுக்கு அதன்படி செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை


அனைத்து அதிகாரங்களும்  இன்னும் அரசிடமே உள்ளது 


பொதுவாழ்வில் எங்கும் சுயநலம்தான் 


எதிலும் தனக்கு ஆதாயம் கிடைக்கவேண்டும் என்று இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் ( குடி போதையில் )எதிர்பார்க்கிறான்


தனி மனிதன் முதலில் திருந்தவேண்டும் 


திருந்திய சமுதாயம்தான் நல்ல ஆட்சிக்கு வித்திடும் 
இப்போது உள்ள சமுதாயம் எல்லாவற்றையும் விற்று தின்றுவிடும் 

மக்கள் மனதில் நேர்மையாக வாழும் எண்ணம் வளர
அவர்கள் பயிற்றுவிக்க பட வேண்டும்

அவர்கள் நல்லவர்களை மட்டும் தங்களை ஆள தேர்ந்தெடுக்க
வலியுறுத்தபடவேண்டும்

அறுதி பெரும்பான்மையில்லாத ஒரு அரசையும், அதை நடத்துகின்ற கட்சியையும்,இந்த மசோதாவை எதிர்க்கும் கட்சிகளையும் கொண்டு
அனுதினமும் அமளியில் முடியும் அமைப்பை கொண்டு இந்த மசோதாவை
அவசர அவசரமாக சரியாக ஆலோசிக்காமல் நிறைவேற்ற நிர்பந்திக்கும்
அன்ன ஹசாரேவின் முயற்சி உரிய பலனை தராது .

முதலில் மக்கள் மனதில் லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பது கீழ்த்தரமான அவமானகரமான செயல் என்பதை மக்கள் மனதிலும் இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகள் மனதிலும் பதிய வைக்க அன்னா ஹசாரே முயற்சி செய்யட்டும்

தற்போது இருக்கின்ற சட்டங்களே அயோக்கியர்களை தண்டிக்க போதுமானது


அந்த அமைப்புக்களில் காலதாமதமில்லாமல் விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டித்து  அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற சில திருத்தங்களை கொண்டு வந்தால் போதும்


ஒரு நீதிமன்றம் பல ஆண்டுகாலம் குற்றவாளிகளைவிசாரித்து தண்டனை வழங்கிவிட்டால் மேல்முறையீடு செய்ய வழி வகுக்கும் கேலிக்கூத்தான நடைமுறை நீக்கபட்டாலே போதும் இன்று பல குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது

அதை விடுத்து புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவந்து அதற்க்கான நடைமுறைகளை செயல்படுதுவதற்க்குள்
இந்த சட்டம் நீர்த்துபோயவிடும் என்பதில் சந்தேகமில்லை

பொது வாழ்வில் வருபவர்களுக்கு குற்ற பின்னணி  இருந்தால் அவர்களை போட்டியிட தடுக்கும் சட்டம் கடுமையாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலே போதும் இன்று இருக்கும் பெரும்பாலான அரசியல் வாதிகளும் அடுத்த தேர்தலில் நிற்க முடியாது


நாட்டில் விலைவாசிஉயர்வு, சமூக விரோதிகளின்  அட்டகாசம், நேர்மையற்ற தலைவர்களின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில்
உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள சிறை செல்ல கோரி மக்களை தூண்டுவது
அவர்களுக்கு துன்பத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும்.

மக்களிடையே லஞ்சம் கொடுப்பது தவறு என்றும் தான் அதை செய்ய மாட்டோம் என்று உறுதியாக நிலைபாட்டை மேற்கொள்ள வைத்துவிட்டால்
போதும் எந்த  சட்டங்களும் தேவைபடாது

அன்னா ஹசாரே முதலில் மக்களை அந்த உறுதி மொழிஏற்க வைக்கட்டும்  அதுதான் அவருக்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது
.
அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை  ஏற்படாமல் ஒரு மசோதாவை நிறைவேற்ற நிர்பந்திப்பது நம் நாட்டு ஜனநாயகத்தையே அழித்துவிடும்
அதன் நோக்கமும் உண்மையான பலன்களை தராது .

No comments: