Monday, December 12, 2011

விவசாயிகளை எந்த அரசும் வாழ்த்துவதும் இல்லை
அவர்களை வாழ வைப்பதும் இல்லை

மாறாக அவர்களை அலைகழிக்கின்றன
நாமெல்லாம் பசியில்லாமல் வாழ அவர்கள்
செய்யும் தியாகத்தை கொச்சைபடுதுகின்றன
மாநில அரசுகளும் மத்திய அரசும்

விவசாயி மழையை நம்பி தான்
விவசாயம் செய்கிறான்
பசுந்தாள் உரத்தை நம்பி விவசாயம்
செய்து வந்தவனை ரசாயன உரத்தை நம்பி
அவனை நாசமாக்க திட்டம் தீட்டி
இன்று அதையும் நம் நாட்டில் உற்பத்தி செய்யவும் முடியாமல்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் முடியாமல்
தடுமாறும் அரசுகள் விவசாயிகளை அலைகழிக்கின்றன

தரமான விதைகளை உரிய காலத்தில் வழங்க
ஏற்பாடு செய்வது கிடையாது

பயிருக்கு தேவையான முறையான
நீர்பாசன வசதிகளை செய்து தருவது கிடையாது

தங்கு தடையற்ற சீரான மின்சாரம் தருவதற்கு
உத்தரவாதம் கிடையாது

நன்றாக பயிர் விளைத்தால் சேமித்து வைக்க
கிடந்குகளோ,பதபடுத்தும் நிலையங்களோ
கிடையாது

சரக்குகளை சேமித்து நல்ல விலையில்விற்க
சந்தைபடுத்த நல்ல அமைப்புகள் கிடையாது

வெள்ளம் வறட்சி போன்ற எதிர்பாராத
ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற காப்பீட்டு வசதி
கிடையாது

முக்கியமாக இடை தரகர்களின் அட்டூழியத்திலிருந்து
அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை

உற்பத்தி செய்யும் விவசாயிக்கு
விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை

கூட்டுறவு சங்களை அரசியல் தலையீடின்றி நடத்த
எந்த அரசும் ஒப்புகொள்வதில்லை

பயிர்கடன்கள் உரிய காலத்தில் அளிக்கபடுவதில்லை
தண்ணீர் இல்லை ,சீரான மின்சாரம் இல்லை
இலவச மின்சாரம் இலவச மோட்டார் வழங்கி என்ன பயன்?

கடனையும் வட்டியையும் தள்ளுபடி செய்வது வெறும் விளம்பரத்திற்கு மட்டுமே
தனியார்களிடம் வாங்கிய கடனை யார் அடைப்பது?

இந்தியா முழுவதும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயிகளின்  அவல நிலையை யார் போக்குவது ?

எவ்வளவோ தொல்லைகள் இருந்தும் விவசாயி
அதனை துன்பங்களையும் தாங்கி பயிர் தொழிலை
செய்துவருகிறான்
.
இதற்கெல்லாம் ஒரே வழி விவசாயிகளின் விளைபொருளுக்கான
விலையை இடைதரகளின்றி அவர்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கபடவேண்டும்

அவர்கள் உள்ளூர் சந்தைகளில் விற்றது போக மிகுதியை அரசு
கொள்முதல் செய்து விற்றுகொள்ளட்டும்

பொருட்கள் பாழாகாமல்தடுக்க  குளிர் பதன வசதிகளும் சேமிப்பு
கிடங்குகளும் அமைத்து தருதல்

விவசாயத்திற்கு தொடர்பில்லாத அரசியல்வாதிகளை
கூட்டுறவு சங்கங்களிருந்து அப்புரபடுதுதல்

நாட்டின் தேவைக்கேற்ப ,இடம் தண்ணீர் தேவைகேற்ப
உணவுபொருட்களை பயிரிட வழி வகுத்தல்

ஏரிகள்,குளங்கள்,கால்வாய்கள் ,நதிகளில் தடுப்பணைகள்
கட்டுதல் ஆகியவற்றால் நீரை சேமித்து சீராக விவசாயிகளுக்கு நீரை வழங்க
ஏற்பாடுகள் செய்தல்

கட்டுமானங்களில் தரமற்ற ஒப்பந்தகாரர்களை ஒழித்து
அந்த பகுதி விவசாயிகள் குழுக்களின் கண்காணிப்பில் தரமான
பணிகளை செய்ய அனுமதித்தல்

பயிரிடும் விவசாயிக்கு நிலங்களை உரிமையாக்குதல்
அனைத்து மட்டங்களிலும் விவசாயிகளை பயன்கள் சென்றடையாமல் தடுக்கும் ஊழலை களைதல்

நம் நட்டு விவசாயிகளின் வாழ்க்கையை பாதிக்கும்
எந்த கொள்கை முடிவையும் எடுக்காதிருத்தல்

இவைகளை செய்யுமா இந்த அரசுகள்?
அறுபது ஆண்டுகளாக நடக்கவில்லை

எனினும் கனவு காண்பதில் தவறு இல்லை
என்றாவது அந்த கனவு ஒருநாள் நனவாகலாம்






No comments: