Friday, February 3, 2017

கடலில் கொட்டிய எண்ணெய் ?

கடலில் கொட்டிய எண்ணெய் ?

கடலில் கொட்டிய எண்ணையை
கையால் வாரும் கையாலாகாத
அரசுகள்.

மைய்ய அரசும் மாநில அரசும்
வழக்கம் போல அறிக்கை
போர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன

கடலை நம்பி வாழும் அப்பாவி உயிரினங்கள்
செத்து ஒதுங்குகின்றன கடற்கரையில்

கடலை நம்பி குடலை வளர்க்கும்
மீனவர்கள் வாழ்வில் மண்ணை
அள்ளிப்  போட்டுவிட்டது இந்த
 விபத்து.

நீர் மேல் மிதக்கும் கசடுகளைக் கூட
அப்புறப்படுத்த வழி வகையற்று
தவிக்கிறது சுத்தத்தைபற்றி
வானளவாக பீற்றிக்கொள்ளும்
ஆளும்  வர்க்கம்.

கடற்க்கரை காற்று அடிக்குது
மிதக்கும் எண்ணெய்  துர்நாற்றம்
குடலை  பிடுங்குது.

நம் நாட்டில்  இந்த பிரச்சினை
தீர போர்க்கால அடிப்படையில்
செயல்பட தொழில் நுட்பம் இல்லையா?
அல்லது அதுவாகவே சரியாகிவிடும் என்ற
மெத்தனமா?

அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.


Thursday, October 25, 2012

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?


பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விட்டதே?





அடக் கடவுளே !
இதென்ன பிள்ளையார் பிடிக்க
குரங்காய் போய்விட்டதே?

நாம் ஆளும் கட்சி மீது 
ஊழல் புகார் சொன்னால்
இப்போது நான் செய்த 
ஊழல் வெளிகிளம்பிவிட்டதே?

நம்ம கட்சி தலைவர்  பதவியே பறி 
போய்விடும் போல இருக்கிறதே ?

அய்யா அதுமட்டுமில்லை 
நீங்கள் செய்த ஊழலால்
உங்கள் கட்சிஇனி ஆட்சியை 
பிடிக்கும் என்ற கனவும்
சேர்ந்து போய்விட்டது 

Friday, June 8, 2012

எத்தனை காலம்தான் ஏமாற்ற்றுவார் இந்த நாட்டிலே?



எத்தனை காலம்தான் 
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறியிருக்கலாம்
ஆனால் எந்த வகையில் 
என்பதுதான் என்று கேள்வி?

ஊதாரித்தனமாக  அரசு யந்திரங்கள் 
முப்பது லட்சம் செலவு செய்து 
அரசு அலுவலக கழிப்பிடங்களை 
பழுது பார்க்கின்றனர்
வெட்ககேடு


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு 
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர 
அரசும் தயாராக இல்லை 
மக்களுக்கும் இந்த முக்கியமான 
சுகாதார பிரச்சினையை பற்றி 
சிந்திக்கும் அறிவும் இல்லை  

அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல் 
சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின் 
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு 

ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு 
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும் 
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்கலேன்றால் நல்லது 

இல்லையேல் மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகள் 
உழைத்து உழைத்து
ஓய்ந்து   போயிருக்கும் மக்கள் 
உங்களை துவைத்து எடுக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை 

Tuesday, April 17, 2012

கல்லா கட்டும் பாபாக்கள்

கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்

பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்

சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்

மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்

உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைபடுதுவதும்,
சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து
அலையும் பல கூட்டங்கள்

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

நீர் வழங்கும் ஏரிகளை சேரிகலாக்கி அரசியல் துணையுடன் அசுத்த படுத்தி வருகிறது அராஜக கூட்டம் 

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் 
ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் ,கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ,ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 

இறைவா நீ அவதாரம் எடுத்து இவைகளையெல்லாம் சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை 




Wednesday, April 4, 2012

தயாராக இருக்கவும்

மின் கட்டண உயர்வு-தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில்
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

வழக்கம்போல் எதி(ரி) கட்சிகள்கள் 
தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்க போய்விட்டன

மக்கள் என்ன செய்வார்கள்? பாவம் 
அவர்களால் என்ன செய்ய முடியும்?

ஓசியில் மிக்ஸி  மின்விசிறி  தொல்லை காட்சிபெட்டி, 
இண்டஷேன்   அடுப்பு  வாங்கிவீட்டில் ஜம்பமாக 
வைத்து கொண்டதர்க்கு  தண்டனையாக 
மின் கட்டணத்தை செலுத்தி 
தொலைக்க வேண்டியதுதான்

நடுத்தர மக்கள் தரமற்ற மின்சாரத்தை 
பெற்றுக்கொண்டு தரமற்ற தொலைகாட்சி பெட்டிகளில் 
தரக்குறைவான காட்சிகளை கண்டு அழுதுகொண்டிருப்பதோடு 
மற்ற அறிவிப்புகளையும் ரசித்து கொண்டு மின் கட்டணத்தை 
அழுவதை தவிர வேறு வழியில்லை 
வீட்டில் மின்விசிறி,பிரிஜ் தொலைகாட்சி பெட்டி, ஏசி ,வாசிங் மச்சின் 
மாவு இயந்திரம், இச்டிரிபெட்டி, தண்ணி மோட்டார் , இண்டக்ஷேன் அடுப்பு, என ஏராளமான கருவிகளை வாங்கி வைத்துள்ளதால் மாதம்500யூனிட்டுக்களுக்கு கண்டிப்பாக ஆகும்.
எதையும் இனி நிறுத்த முடியாத முடியாது. எனவே வயிற்றில் ஈர துணியை போட்டு கொண்டு மின் கட்டணத்தை செலுத்த வேண்டியதுதான் 

பிரணாப் மாமா 12.அரை விழுக்காடு சேவை வரி எல்லாவற்றிலும் போட்டு நம்மையெல்லாம் குஷிபடுதி இருக்கிறார்


வாடகைக்கு குடியிருப்போர் இனி நடு தெருவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

கையாலாகாத அரசியல்வாதி களை நம்மை மேய்க்க  அனுப்பி வைத்தால் அவர்கள் அரண்மனையில் உல்லாசமாக பவனி வருவதும், ஆடம்பரமான கார்களில் சுற்றி வந்து பந்தா காட்டுவதும் மக்களை ஏமாற்றி திரிவதும் வாடிக்கையாகிவிட்டது
.
இதற்க்கு காரணம் மக்கள் தங்கள் பிழைப்பு எப்படியாவது நடந்தால் போதும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான். இந்த துன்பத்திற்கு காரணம் .

எல்லாவற்றையும் மொத்தமாக தண்டம் அழுதுவிட்டு மகிழ்ச்சியாக கோவணத்தை கட்டி கொண்டு கிளம்பிவிடலாம். தயாராக இருக்கவும்  

மின்சாரத்தை இலவசமாக வாரி இறைக்கும் இந்த அரசியல்வாதிகளால் ஆளப்படும் அரசுகள் வோட்டு வங்கிக்காக அதை என்றும் நிறுத்த போவதில்லை

தொடர்ந்து தரமான மின்சாரத்தை வழங்க எந்நேரமும் எல்லா பிரிவினருக்கும் வழங்க நடவடிக்கை அரசுகள் என்று எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது

மின்கட்டணத்தை ஒவ்வொரு மாதமும்  செலுத்த அரசு மக்களுக்கு 
உதவி செய்தால் 500 யூனிட்டுக்களுக்கு மேல் ஆகும் மின்சார அதிர்ச்சியிலிருந்து மக்கள் தப்பிக்க உதவியாய் இருக்கும்

இந்த உதவியையாவது மாண்புமிகு முதல்வர் செய்தால் மக்கள் அவரை வாழ்த்துவார்கள் 

செய்வாரா?

Monday, March 19, 2012

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்

பணம் ஏராளமாக இருக்கிறது வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும் எல்லாம் இருந்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை? மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள இயலாமையால் மனம் போன போக்கில் மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள். தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள் அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள் மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து, லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில் அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள். முடிவில் அவர்களும் புதையுண்டு போகிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் . இதுபோன்ற மன நோயாளிகளின் போக்கிற்கு காரணம் சுயநலம்தான். அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற சில மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம். எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான் அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம் அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும் என்று யாரும் யோசிப்பதில்லை அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ தரும் இன்பம் தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா? அழகிய உயிருள்ள குழந்தையின் ஒவ்வொரு அசைவும் மழலையும் தரும் மட்டற்ற இன்பம் ஒரு பொம்மை தர இயலுமா? பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும் தினமும் ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும் உயிருடன் இருக்கும்போதே அனைவருடன் அன்போடு பழக வேண்டும் வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும் பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல் பிறர் மீது புறங்கூறாமல், பிறருக்கு துன்பம் விளைவிக்காமல், பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் , இல்லாதவருக்கு உதவுவதும், பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும், எல்லாம் வல்ல இறைவன் மீது நம்மையும் இந்த உலகையும் படைத்த இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து அகந்தையில்லாமல் வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும் கவலைகள் இல்லாமல் வாழலாம். இவ்வுலகில் அமைதி தவழ நம்மை படைத்த இறைவனை தினமும் காலையில் கண் விழித்ததும் பிரார்த்தனை செய்வோம.

Friday, March 16, 2012

முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்

முகர்ஜியின் மூக்கறுக்கும் பட்ஜெட்

12 விழுக்காடு சேவை வரி
12 விழுக்காடு கஸ்டம்ஸ் டியூட்டி
ஏற்கெனவே பெட்ரோல்,டீசல், சமையல் 
எரி வாயு கட்டணம் ஏற்றியாகிவிட்டது
ரயில்வே கட்டணங்கள் உயர்த்தபட்டுவிட்டன


தமிழகமுதல்வர் ஏற்கெனவே பஸ் கட்டணம்,
பால் கட்டணம் உயர்த்தி மக்களை மகிழ்வித்துவிட்டார்
மின்சாரம் இல்லாமல் தமிழ்நாடு நாசமாய் 
போய்கொண்டிருக்கிறது 
இதை சரிபடுத்த யாருக்கும் நாதியில்லை
மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டுகொண்டு 
வெத்துவேட்டு அறிக்கைகளை விட்டுகொண்டு 
வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது 


எல்லா பொருட்களும் விலை உயர்ந்து 
எந்த உயரத்திற்கு செல்லும் என்று யாருக்கும் தெரியாது 


தங்கத்தின் மீது வரி போட்டு அதை இன்னும் அதிக உயரத்திற்கு
கொண்டு சென்றுவிட்டார்


ஆனால் இன்னும் மக்களுக்கு தங்கம் மீது மோகம் குறையவில்லை 
எல்லாவற்றையும் போட்டு தங்க நகைகள் வாங்கி சங்கிலி அருப்பன்களுக்கு கொடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம்


இல்லாவிடில் வீட்டில் ஓட்டை இரும்பு பீரோவில் வைத்து திருடர்கள் எடுத்துகொள்ள வழி வகை செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி


கேரளா நகை வியாபாரிகள் நம்மிடம் நகைகளை விற்றுவிட்டு மீண்டும் அவர்களே நகை கடன் தருகிறேன் என்று அந்த நகைகளை அபேஸ் செய்வதற்கு வழி வகுக்கும் முட்டாள் தமிழ் மக்கள் 

லட்சகணக்கில் பிணமாய் போன ஈழ தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்காத  
தமிழர்களின் ஒரே,ஒப்பற்ற தலைவர் ஒரு கட்டிடம் இடம் மாற்றுவதற்கு 
தீக்குளிப்பேன் என்று ஒப்பாரி வைக்கிறார்
.
மத்திய அரசு இலங்கை போர் குற்றங்கள் தீர்மானத்திற்கு 
ஆதரவாக நிச்சயம் ஒன்றும் செய்யபோவதில்லை

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத ஆடுகள் 
தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டு
மந்தை மந்தையாய் சாகும் மாடுகள் 

எந்த காலத்திலும் இவர்கள் எதற்கும் ஒன்று சேரபோவதில்லை
தனி தனியாக புலம்புவதும் பொது சொத்துக்களை அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டி பின்பு  அடங்கி போவதும்தான் இவர்கள் இதுவரை செய்த சாதனை.