Thursday, December 15, 2011

இந்திய வங்கிகள் பாதுகாப்பில்லையா?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும்
கருப்பு பணம்-25 லட்சம் கோடி ருபாய் -அத்வானி.

இந்தியர்கள் ஏன் அவ்வளவு பணத்தை
வெளி நாடுகளில் பதுக்கி வைக்க வேண்டும்?
இந்திய வங்கிகள் பாதுகாப்பில்லையா?

இந்திய பணம் இந்தியாவில் இருந்தால்தான்
இந்தியர்களுக்கும் நல்லது
இந்தியாவுக்கும் நல்லது

எனவே அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி
அந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய
அனுமதித்தால் இந்திய மக்களுக்கு உதவியாக இருக்கும்

அதை விடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
ஒன்று அந்த பணம் காணாமல் போய்விடும்
அல்லது அந்த விவகாரத்தில் அனைத்து  கட்சிகளுக்கும்
கட்சிகளை நடத்த பணம் கொடுக்கும் பண முதலைகளுக்கும்
ஆபத்தாய் போய்விடும்

எனவே அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்து
வழக்கு போட்டு நடத்தி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ
எவ்வளவு செலவு அரசிற்கு பிடிக்குமோ யாரறிவார்?

மேலும் அவர்களை காப்பாற்ற நீதிமன்றங்கள் இருக்கின்றன
என்ன தண்டனை கொடுத்தாலும் அவர்களை
காப்பாற்ற ஜெத்மலானி போன்ற
வழகறிஞர்கள் இருக்கிறார்கள்

ஜாமீன் வழங்க அடுத்தடுத்து நீதிமன்றங்கள் இருக்கின்றன
ஆண்டுகள் பல ஓடிவிடும்,அதில் சிலர் மாண்டும் விடுவார்கள்
வழக்கு போட்ட அரசும் இருக்காது

நாளொரு ஊழல் என அரங்கேறிவரும் நம் நாட்டில்
மக்கள் இந்த வழக்கை மறந்தே போய்விடுவார்கள்

எனவே அவர்களை பழி வாங்குவதை விட
அவர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்கி
நம் நாட்டிற்குபயன்படுத்திகொள்வது
என்று சிந்திக்கும் தலைமையே இன்று நம்
நாட்டிற்கு தேவை

புத்திசாலிகளை புத்திசாலித்தனமாக்  பயன்படுத்திக்கொண்டு
நம் நாட்டை முன்னேற்றும்  புத்திசாலி தலைவர்களே
இன்று நம் நாட்டிற்கு தேவை..


No comments: