Monday, January 9, 2012

மருத்துவர்களின் இந்த போராட்டம் எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர்

மருத்துவர்களின் இந்த போராட்டம் 
எந்தவிதத்தில் நியாயம்-சிந்திப்பீர் 


தூத்துக்குடியில் மருத்துவர் கொலை :

காரணம்: சிகிச்சைக்காக அதிக பணம் செலவழித்தும் 
தன மனைவி ,குழந்தையை காப்பாற்றாமல் அறுவை சிகிச்சை செய்யும்போது பிரச்சினை ஏற்பட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கையில் மரணம் .அந்த சோகமும், வேதனையும் கொலையில் முடிந்திருக்கிறது .இது ஒரு தனிபட்ட நிகழ்வு.

இதுபோன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் ஏராளமாக நடக்கின்றன. ஆனால் கொலை செய்யும் அளவிற்கு யாரும் செல்வதில்லை. மறியல்,வழக்கு என்று செல்வதை தவிர.

இந்த நிகழ்வில் சம்பத்தப்பட்ட மருத்துவர் இந்த குறிப்பிட்ட 
அறுவை சிகிச்சையை செய்ய தகுதி பெற்றவர் அல்ல 
என்பது தற்போது வெளியாகி இருக்கும் செய்தி. இவர் போன்றவர்கள் பணம் சம்பாதிப்பதர்க்காக செய்த முறையற்ற செயல் 
அவர் உயிரை பலி வாங்கி விட்டது

இதுபோல்தான் தமிழ் நாட்டில் ஒரு மருத்துவர் தகுதி பெறாத தன மகனை அறுவை சிகிச்சை செய்ய வைத்து விளம்பரம் பெற நினைத்து  வம்பில் மாட்டிகொண்டார்

இன்று அனைத்து மருத்துவர்களும் வீதியில் 
இறங்கி போராடுகிறார்கள் 
தங்களுக்கு பாதுகாப்பு கோரி


யார் யாருக்கு பாதுகாப்பு தருவது? 
ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளித்தாலும் 
வரும் மரணத்தை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது
அவரவர் நேர்மையும்,நன்னடத்தையும் பிற உயிர்களிடம் அவர்கள் காட்டும் அன்பும் பரிவும்தான்  அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து 
பாதுகாப்பு பெற்று கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் 



அது சரி  இவர்களிடமிருந்து அப்பாவி நோயாளிகளுக்கு
 யார் பாதுகாப்பு அளிப்பது?


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?
உங்கள் மனசாட்சியை கேளுங்கள் பதில் கிடைக்கும் 

மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்கள், அத்துமீறல்கள், பகல் கொள்ளைகளை நாடே அறியும்,
மருந்து தயாரிக்கும்நிறுவனங்கள் பரிசோதிக்கும் கருவிகள் ,ரத்தம் மலம் மற்றும் பலவிதமானஆய்வு கூட உரிமையாளர்கள், மருந்தகங்கள் ஆகியவர்களோடு மருத்துவர்கள்  சேர்ந்துகொண்டு கமிஷன் அடித்து அந்த தொகையை நோயாளிகளின் தலையில் கட்டுவதையும் மக்களும்  அறிவர், ஏன் அவர்களும் அறிவர்ர்கள்

தேவையில்லாமல்,பரிசோதனைகள் செய்ய வைத்து பல ஆயிரம் முதல் லட்சம் வரை மக்களின் இயலாமையை பயன்படுத்தி காசு பறிக்கும் பகல் கொள்ளையர்களின் மீது உள்ள ஒட்டுமொத்தமான ஆத்திரம்தான் தூத்துக்குடி கொலை 

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியாதீர்கள் மருத்துவர்களே 
மக்கள்கோபம் உங்கள்மீது திரும்பினால்  நீங்கள் இருக்கும் இடத்தில கட்டிடம் இருக்காது, நீங்களும் இருக்கமாட்டீர்கள். வெறும் கற்கள்தான் இருக்கும்.

நேர்மையாக வாழுங்கள் உங்கள் சேவையால் மக்கள் நெஞ்சங்களில் வாழ முயற்சி செய்யுங்கள். ஆடம்பரமாகமருத்துவமனைகளை கட்டி கொள்ளையடிப்பதைவிட்டு.விட்டு   

No comments: