Tuesday, January 24, 2012

லொள்ளு தாங்கமுடியவில்லை

இனியும் தாங்காது 
இந்த கண்ணா மூச்சி ஆட்டம் 

லொள்ளு தாங்கமுடியவில்லை

கூடங்குளம் அணுமின்நிலையம் 
அமைக்க செலவு 14ஆயிரம் கோடிக்கு மேல்
ஒரு தனி மனிதன் ஒரு சிறு கூட்டத்தை 
வைத்துகொண்டு அதை 
திறக்க விடாமல் செய்கிறார்

பல கோடி மக்கள் பயன் பெறும் திட்டத்தை 
செயல்படாமல் தடுக்க அவர் மாநில, மத்திய
அரசுகளையே மிரட்டுகிறார் 

அணுமின்நிலையம் திறக்க ஆதரவு 
எத்தனையோ போராட்டங்கள் 
தமிழ்நாடு முழுவதும் 
நடந்து ஓய்ந்து விட்டன
ஒன்றும் பயன்படவில்லை/
எடுபடவில்லை 

நம் நாட்டில் மக்களுக்காக  
மக்களின் நன்மைக்காக ஆளுகின்ற அரசு என்று 
ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை 

சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள்,
 மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், 
முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி 
என்று ஏராளமான கூட்டம் இருந்தும் 
ஒரு தனி மனிதனை கண்டு பயந்து 
மக்களுக்கு பயன் படும் திட்டத்தை 
கிடப்பில் போட்டு வைத்திருப்பதின்  மர்மம் என்ன 
என்று யாருக்கும் புரியவில்லை

தினந்தோறும் வாய்சொல் வீரர்களின் 
வெத்து வேட்டு அறிக்கைகள்
நாளிதழில், தொலைகாட்சியில் பெயர் வந்ததும் 
அடுத்த அறிக்கை விட தயாராகிவிடும் அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டு மக்களே.இந்திய மக்களே 
உங்களுக்கு விடிவுகாலமே கிடையாதா?

நீங்கள் என்றுதான் செயல்படவைக்கும் 
தலைமையை தேர்ந்தெடுக்க 
துணிவீர்கள்?

எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி சுமார் 
என்றுதான் ஒவ்வொரு தேர்தலிலும் 
ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டிய 
கட்டாய சூழ்நிலையை உருவாக்கியது யார்?

சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 


இலவசங்களை பெற்றுக்கொண்டு 
ஐந்து ஆண்டுக்கொருமுறை அடிமைசாசனம் 
எழுதி கொடுப்பதற்குத்தான் நீங்கள் பிறந்திருகிறீர்களோ ?

அப்படியானால் நீங்கள் இருந்தும் ஒன்றுதான்
இல்லாததும் ஒன்றுதான் 


No comments: