Wednesday, January 4, 2012

தேவையா இந்த போலி சுதந்திரம்

தேவையா இந்த போலி சுதந்திரம்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னார்கள்

எல்லோரும் சரிசமம் என்று சொன்னார்கள்

எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்று சொன்னார்கள்

வறுமை நீங்கி வாழ்வு வளம் பெரும் என்று சொன்னார்கள்

எல்லோரும் கல்வியறிவு பெறலாம் என்று சொன்னார்கள்

எல்லோருக்கும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்

ஆனால் என்ன நடக்கிறது?

நாடு முன்னேறியுள்ளது


ஆனால் நாட்டு மக்கள் முன்னேறினார்களா  என்பதுதான் கேள்வி?


பல கோடி மக்கள் அடிப்படை தேவைகளை கூட
பெற இயலாது தவிக்கின்றனர் 
என்பதை யாரும் மறுக்கவோ 
மறைக்கவோ முடியாது 


சாராயமும், மதுவும் நாட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது

பணக்காரன் வெளிநாட்டு சரக்கு குடிக்கிறான்

ஏழை குடலை அழிக்கும் சாராயத்தையும்,
விஷ சாராயத்தையும் குடித்து
தானும் அழிந்து தன குடும்பத்தையும்
நிர்க்கதி ஆக்குகிறான்

கல்வி பணக்காரர்களுக்கே கிடைக்கிறது
ஏழை குழந்தைகள் கல்வியறிவு
பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர்

பலகோடி பேர் வேலை வாய்ப்பு  அலுவலகத்தில்
பல ஆண்டுகள் பதிவு செய்தும்
வேலை கிடைக்கவில்லை

மேற்கத்திய கல்வி முறையால் மாணவர்களிடம்
மன அழுத்தம்தாம் அதிகமாகியுள்ளது 
ஒரு சின்ன பிரச்சினையை கூட எதிர்கொள்ளும் 
மன உறுதி அவர்களுக்கு இல்லை
.
குடிக்கிறார்கள், புகையிலை போதைக்கு
அடிமையாகி தங்களை வாழ்வை
 நாசமாக்கிகொள்ளுகிரார்கள் அழிதுகொள்ளுகிரார்கள்.
சினிமா,மற்றும் அரசியல் பிசாசுகளிடம் சிக்கி
தங்கள் எதிகாலத்தை கேள்விகுறியாக்கி கொள்ளுகிறார்கள்

வீட்டிலும் பாதுகாப்பில்லை,
வெளியிலேயும்  பாதுகாப்பில்லை.
வீட்டை பூட்டிவிட்டு சென்றால் 
அன்றே கொள்ளை போகும் 
அனைத்து பொருட்களும்.
தடுத்தால் உயிர் போகும் 
அது இரவானாலும்,பகலானாலும் சரி
.
வெளியில் சென்றால் வழிப்பறி கொள்ளை

வயதான பெண்கள்,தனியே இருக்கும் பெண்கள்
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம்,
கொலை செய்ய படலாம்
பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடலாம்

பெண் குழந்தைகளுக்கு பள்ளியிலும் பாதுகாப்பில்லை.
ஆசிரியர்களே பாலியியல் தொல்லை தருகிறார்கள் 
கல்வி  கற்பிப்பதை விட்டு கலவியை பற்றி பேசுகிறார்கள்.

நிம்மதியாக தொழில் செய்ய
அரசும் விடுவதில்லை
சமூக விரோதிகளும் விடுவதில்லை.
தொழிலுக்கு தேவையான், மின்சாரம்,
கட்டமைப்பு வசதி ஒன்றும்
சரியாக கிடைப்பதில்லை

தினம் தினம் வரிகள் மக்களின் மீது திணிக்க படுகின்றன
மனிதன் பிறப்பிலிருந்து மண்ணிற்குள் போகும்வரை எல்லாவற்றிலும் வரி விதித்து மக்களை கொடுமைபடுத்தும் மாநில, மத்திய அரசுகள் 

விவசாயிகள் பாடு திண்டாட்டம். அவர்களை வாழ வைக்க எந்த அரசுகளும் முயற்சி எடுப்பதில்லை மாறாக அவர்களை தற்கொலைக்கு தூண்டி பல லட்சம் பேர் மாண்டுபோயிருக்கிரார்கள்

ஆனால் சமூக விரோதிகளும், லஞ்ச பேர்வழிகளும், கள்ள கடத்தல்காரர்களும், அரசியல்வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மக்களை சுரண்டி கொழுத்து கோடீஸ்வரர்களாகி உள்நாட்டில் பணத்தை பதுக்கியது போதாதென்று வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ளார்கள் 

ஒன்று அல்லது   இரண்டு பேர் வாழும் பணக்காரர்களுக்கு பல பங்களாக்கள் பல கோடி ரூபாயில் 

உழைத்து ஓடாய் போகும் பல கோடி மக்களுக்கு இருப்பிடம்,நடைபாதையில்

உழைப்பவர்களுக்கு அனைத்தும் காசு கிடைத்தால் தான் கிடைக்கும்

ஆனால் இவர்களை ஆட்சிசெய்யும் அரசியல்வியாதிகளுக்கு அத்தனையும் இலவசம் 


இது போதாதென்று அவர்கள் ஊழல்  செய்து மக்களுக்கு துரோகம் செய்து மக்களை ஏமாற்றி பல தலைமுறைக்கு சுருட்டும் பணம் பல லட்சம் கோடி


நாட்டில் எங்கு பார்த்தாலும் மோசடிகள்,எதிலும் மோசடிகள்.மக்களை ஏமாற்றிபணம் பறிக்கும் கும்பல்ஸ் இல்லாத இடமே இல்லை


நீதித்துறை தூங்கி வழிகிறது
காலத்திற்கு ஒவ்வாத சட்ட பிரிவுகள்
நிரபராதிகளை விட குற்றவாளிகளுக்குதான் 
சாதகமான சட்ட பிரிவுகள் லட்சகணக்கான வழக்குகள் 
பல்லாண்டுகளாக தேக்கம்


கொடுமையான குற்றவாளிகளுக்கும் 
தண்டனை நிறைவேற்ற முடியாத அளவில் 
தவறான போராட்டங்கள்  

தினம் தினம் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள்  சாலை மறியல், வன்முறை பொது சொத்துக்களை சூறையாடுதல் காவல்துறை அடக்குமுறைகள்,துப்பாக்கி சூடுகள், உயிரிழப்புகள் இல்லாது ஒரு நாளும் விடியாது.மக்களின் அல்லல்களுக்கு அளவே இல்லை

மக்களை குழப்பும் பல நூறு அரசியல் கட்சிகள், மத வெறியர்கள்

மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்காத கையாலாகாத மாநில,மத்திய அரசுகள்

எவ்வளவு காலம்தான் இந்நிலை நீடிக்கும்? 
என்று நம் நாட்டு மக்கள் நலமாக வாழ போகிறார்கள்? 
என்று சுயநல அரசியல்வாதிகள் ஒழிந்து
நம் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்






No comments: