Tuesday, January 3, 2012

தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது





தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது 

அது விட்டு சென்றது பேரழிவு

எடுத்துசென்றது பல உயிர்களை

வாழ்வதற்கே வழியில்லாது அனைத்து 
ஆதாரங்களையும் அழித்து விட்டது
கோர புயல் 

மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ,என்ன செய்வதென்று
புரியாமல் கலங்கி நிற்கின்றனர்

பொறுப்பற்ற மத்திய அரசு தமிழ்நாடு அரசு அறிக்கை கிடைத்தவுடன்
மத்திய குழு பார்வையிட்டு நிதி வழங்கும் என்று அறிக்கை விடுகிறது

தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக மின் இணைப்புக்களை சரிசெய்து குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

அனைத்து சேதங்களுக்கும் முன்னுரிமை  அளித்து இழப்பீடு தொகைகளை அறிவித்துவருகிறது

சாலைகள் முழுவதுமாக அழிந்துவிட்டதால் எந்த உதவிகளும் பல நூறு கிராமங்களுக்கு பல நாட்களாகியும் போய் சேரவில்லை .

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆண்டுதோறும் புயல் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருவது வாடிக்கை .இது மாநில அரசுகளுக்கும் தெரியும் ,மத்திய அரசுக்கும் தெரியும்

தற்போதுள்ள அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தும் அரசு நிர்வாகம் தூங்குகிறது

மொத்தமாக அழிந்துவிட்டபிறகு கணக்கெடுப்பு எதற்கு?

முதலில் உயிர் பிழைக்க உதவிகள் அளிக்கப்படவேண்டும் 
பிறகு பார்த்துகொள்ளலாம் மற்ற உதவிகளை 
.
வழக்கம்போல் எதிர்கட்சிகள் தங்கள் சுய விளம்பரதிற்க்காக 
தங்கள் பங்குக்கு இடங்களை பார்வையிடுவதும் 
ஆளும் கட்சிக்கே எதிராக அறிக்கைகள் விடுவதும் 
வழக்கமான ஒன்று.இப்போதும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் 
அதைத்தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது 
அவர்கள் என்றும் திருந்தபோவதும் கிடையாது .

அனைத்தையும் இழந்த மக்கள் தங்களை நிலைபடுத்தி கொள்ளும் வரை அவர்களுக்கு தினமும், உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக தங்கும் வசதி ஆகியவையே உடனடி தேவை.


முதலில் இந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் 


இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது  

அதை அரசு இயந்திரங்கள் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள்

அதற்க்கு, ஹெலிகாப்டர்கள், ராணுவம், போன்ற வசதிகளை பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கையில் இறங்காவிடில் மக்களின் கோபம் எதில் போய் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


No comments: