Friday, January 6, 2012

தானே புயலுக்கு பின்னே?

தானே புயலுக்கு பின்னே?

புயல் அடித்து சென்று விட்டது
வாழ்வாதாரங்களை முழுவதுமாக சுவடு தெரியாமல் அழித்துவிட்டது

இன்னும் அதை நினைத்து புலம்புவதை மக்களும் நிறுத்தவேண்டும்
எதிர் கட்சிகளும்,ஊடகங்களும் நிறுத்தவேண்டும்

அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளும் ,ஊடகங்களும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்வதுதான் தற்போதைய 
கடமை. மற்ற அரிப்புகளை  தேர்தலின்போது வைத்துகொள்ளலாம் 


உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து மக்களின்
வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த குறுகிய மற்றும் நீண்ட கால
மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு துரிதப்படுத்த வேண்டும்

வெறும் நிதி மட்டும் வழங்கினால் அதில் பாதி லஞ்ச பேர்வழிகளுக்கும் மீதி டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கும், சாராய வியாபாரிகளுக்கும் போய்விடும் மீதி தொகையை மக்கள் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடுவார்கள். 

பயிர் வேலைகளை தொடங்க நிலம் மேம்பாடு,செய்ய,இடுபொருட்கள் வழங்க, மின் சக்தி வழங்க உடன் ஏறபாடு செய்ய வேண்டும் 


புயலால் விழுந்து போன ஆயிரகணக்கான மரங்களை அப்புறபடுத்த, வனத்துறையினரின் யானைகளையும் போகலைன்   இயந்திரங்களையும் பயன்படுத்தினால் விரைவில் இந்த பணியை முடிக்கலாம்



பார பட்சம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தங்கள் இழந்த தொழிலை தொடங்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும்



Thursday, January 5, 2012

பாரதி அன்றும் இன்றும்

 பாரதி அன்றும் இன்றும் 


அன்று:  கல்வியில் சிறந்த தமிழ்நாடு 


இன்று : கலவியில் சிறந்த தமிழ்நாடு 


                  செய்தி: பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியியல் துன்புறுத்தல்
                                    எல்.கே ஜி மாணவியிடம் தலைமை ஆசிரியை மற்றும்     
                                   ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் -குற்றத்தை மறைக்க  
                                    மருத்துவர் உடந்தை-புகார்

இதுபோன்ற பாலியல் கொடுமைகள்  வீட்டிலும் வெளியும் தினம் நடந்து கொண்டிருக்கின்றன .மருத்துவ மனைகள், அலுவலகங்கள்,மாணவர் விடுதிகள்,ஓடும் ரயிலில் ,காவல் துறை என தினமும் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. 


சமூக அவமானம் கருதி அனேக பெண்கள் இதை வெளியில் சொல்லுவதுமில்லை குற்றவாளிகளை காட்டி கொடுப்பதுமில்லை ஏனெனில்புகார் அளித்தால்  குற்றவாளிகளை விட பாதிக்கபட்டவர்கள்தான் அதிக துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கபடுகின்றனர் .


உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கடுமையான சட்டங்கள் நிறைவேற்றியும் அவைகளை நிறைவேற்ற எந்த அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களும் அக்கறை காட்டுவதில்லை. 


பத்திரிகை துறையும், திரைப்பட துறையினரும் ,தொலைகாட்சி ஊடகங்களும் இந்த விஷயத்தை தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுதிகொள்வதில் காட்டும் அக்கறை பாதிக்கப்பட்டவர்களில் மறுவாழ்வுக்கோ அல்லது குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவதற்கோ அக்கறை காட்டுவதில்லை 


திரைபடங்களில் பெண்களின் உடலழகை மிகைபடுத்தி ஆபாசமாக சித்தரிப்பதில் அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர். பாடலாசிரியர்களும் அவர்கள் பங்குக்கு ஆபாச பாடல்களை எழுதி காசு பார்க்கின்றனர். 


சின்ன திரையும் அவர்களைவிட பல மடங்கு பெண்களை இழிவு செய்யும் காட்சிகள் ஒவ்வொரு தொடரிலும் இணைத்து மக்களின் ரசனையை கெடுத்து அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்துவிட்டனர். 


இதை எந்த மாதர் அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை 


பெண்களை இழிவுபடுத்துவதில் ஆண்களை விட பெண்களின் பங்கே 
அதிக அளவு இருப்பதால் இந்த பிரச்சினையில் அவர்கள்தான் 
முதலில் திருந்த வேண்டும் 







Wednesday, January 4, 2012

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களின் துன்பங்களுக்கு யார் காரணம்?

மக்களா அல்லது 
மக்களை குழப்பும் அரசியல்வாதிகளா அல்லது
மக்களை ஆளும் அரசுகளா?

உண்மையில் மக்களின் துன்பங்களுக்கு காரணம் மக்களே

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் 
எல்லாவற்றிற்கும் ஆளும் அரசுகளையும் அரசு இயந்திரங்களையும் 
குறை சொல்லுவதே இயல்பாகி போய்விட்டது

எதற்கெடுத்தாலும் அரசு இயந்திரத்தை எதிர்பார்ப்பதே 
தீராத வியாதிஆகிவிட்டது 

எந்த பிரச்சினைகளிலும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொள்ளும் மனப்பான்மை செத்துவிட்டது

வெளியிலிருந்து உதவி கிடைக்கின்றவரை 
தங்களிடம் இருக்கின்றவற்றை 
இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தூய 
மனப்பான்மை அடியோடு அற்று போய்விட்டது 

தங்களுக்கு தேவையானதை மட்டும்
வைத்துகொண்டு 
இல்லாதவர்க்கு வழங்குவதும் 
இருப்பதை அனைவரும் பகிர்ந்து கொண்டு 
வாழும் உத்தம குணம் இன்று யாரிடமும் இல்லை
  
சுயநலம் காரணமாக அரச வழங்கும் உதவிகளை 
அனைவருக்கும் பகிர்ந்து அளிக்காமல் 
ஒரு சிலரே அனுபவிப்பதால் 
பெரும்பாலான மக்கள் துன்பத்தில்
 சிக்கி தவிக்கிறார்கள்

பொதுமக்களிடம் பொறுமை இல்லை,
சகிப்புத்தன்மை இல்லை, 
நேர்மை இல்லை, ஒழுக்கம் இல்லை .
அதனால்தாம் மக்கள் தொடர்ந்து 
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் 

மக்களின் இந்த மனோபாவம் மாறவேண்டும்.
மாறினால்தான் அனைவருக்கும் நல்லது
இல்லையேல் அவர்களும் நிம்மதியாக வாழமுடியாது
அவர்களை ஆளும் அரசுகளும் நல்ல அரசாட்சியை வழங்க முடியாது.

தேவையா இந்த போலி சுதந்திரம்

தேவையா இந்த போலி சுதந்திரம்?

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னார்கள்

எல்லோரும் சரிசமம் என்று சொன்னார்கள்

எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்று சொன்னார்கள்

வறுமை நீங்கி வாழ்வு வளம் பெரும் என்று சொன்னார்கள்

எல்லோரும் கல்வியறிவு பெறலாம் என்று சொன்னார்கள்

எல்லோருக்கும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று சொன்னார்கள்

ஆனால் என்ன நடக்கிறது?

நாடு முன்னேறியுள்ளது


ஆனால் நாட்டு மக்கள் முன்னேறினார்களா  என்பதுதான் கேள்வி?


பல கோடி மக்கள் அடிப்படை தேவைகளை கூட
பெற இயலாது தவிக்கின்றனர் 
என்பதை யாரும் மறுக்கவோ 
மறைக்கவோ முடியாது 


சாராயமும், மதுவும் நாட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது

பணக்காரன் வெளிநாட்டு சரக்கு குடிக்கிறான்

ஏழை குடலை அழிக்கும் சாராயத்தையும்,
விஷ சாராயத்தையும் குடித்து
தானும் அழிந்து தன குடும்பத்தையும்
நிர்க்கதி ஆக்குகிறான்

கல்வி பணக்காரர்களுக்கே கிடைக்கிறது
ஏழை குழந்தைகள் கல்வியறிவு
பெறமுடியாமல் தத்தளிக்கின்றனர்

பலகோடி பேர் வேலை வாய்ப்பு  அலுவலகத்தில்
பல ஆண்டுகள் பதிவு செய்தும்
வேலை கிடைக்கவில்லை

மேற்கத்திய கல்வி முறையால் மாணவர்களிடம்
மன அழுத்தம்தாம் அதிகமாகியுள்ளது 
ஒரு சின்ன பிரச்சினையை கூட எதிர்கொள்ளும் 
மன உறுதி அவர்களுக்கு இல்லை
.
குடிக்கிறார்கள், புகையிலை போதைக்கு
அடிமையாகி தங்களை வாழ்வை
 நாசமாக்கிகொள்ளுகிரார்கள் அழிதுகொள்ளுகிரார்கள்.
சினிமா,மற்றும் அரசியல் பிசாசுகளிடம் சிக்கி
தங்கள் எதிகாலத்தை கேள்விகுறியாக்கி கொள்ளுகிறார்கள்

வீட்டிலும் பாதுகாப்பில்லை,
வெளியிலேயும்  பாதுகாப்பில்லை.
வீட்டை பூட்டிவிட்டு சென்றால் 
அன்றே கொள்ளை போகும் 
அனைத்து பொருட்களும்.
தடுத்தால் உயிர் போகும் 
அது இரவானாலும்,பகலானாலும் சரி
.
வெளியில் சென்றால் வழிப்பறி கொள்ளை

வயதான பெண்கள்,தனியே இருக்கும் பெண்கள்
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம்,
கொலை செய்ய படலாம்
பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபடலாம்

பெண் குழந்தைகளுக்கு பள்ளியிலும் பாதுகாப்பில்லை.
ஆசிரியர்களே பாலியியல் தொல்லை தருகிறார்கள் 
கல்வி  கற்பிப்பதை விட்டு கலவியை பற்றி பேசுகிறார்கள்.

நிம்மதியாக தொழில் செய்ய
அரசும் விடுவதில்லை
சமூக விரோதிகளும் விடுவதில்லை.
தொழிலுக்கு தேவையான், மின்சாரம்,
கட்டமைப்பு வசதி ஒன்றும்
சரியாக கிடைப்பதில்லை

தினம் தினம் வரிகள் மக்களின் மீது திணிக்க படுகின்றன
மனிதன் பிறப்பிலிருந்து மண்ணிற்குள் போகும்வரை எல்லாவற்றிலும் வரி விதித்து மக்களை கொடுமைபடுத்தும் மாநில, மத்திய அரசுகள் 

விவசாயிகள் பாடு திண்டாட்டம். அவர்களை வாழ வைக்க எந்த அரசுகளும் முயற்சி எடுப்பதில்லை மாறாக அவர்களை தற்கொலைக்கு தூண்டி பல லட்சம் பேர் மாண்டுபோயிருக்கிரார்கள்

ஆனால் சமூக விரோதிகளும், லஞ்ச பேர்வழிகளும், கள்ள கடத்தல்காரர்களும், அரசியல்வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மக்களை சுரண்டி கொழுத்து கோடீஸ்வரர்களாகி உள்நாட்டில் பணத்தை பதுக்கியது போதாதென்று வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைத்துள்ளார்கள் 

ஒன்று அல்லது   இரண்டு பேர் வாழும் பணக்காரர்களுக்கு பல பங்களாக்கள் பல கோடி ரூபாயில் 

உழைத்து ஓடாய் போகும் பல கோடி மக்களுக்கு இருப்பிடம்,நடைபாதையில்

உழைப்பவர்களுக்கு அனைத்தும் காசு கிடைத்தால் தான் கிடைக்கும்

ஆனால் இவர்களை ஆட்சிசெய்யும் அரசியல்வியாதிகளுக்கு அத்தனையும் இலவசம் 


இது போதாதென்று அவர்கள் ஊழல்  செய்து மக்களுக்கு துரோகம் செய்து மக்களை ஏமாற்றி பல தலைமுறைக்கு சுருட்டும் பணம் பல லட்சம் கோடி


நாட்டில் எங்கு பார்த்தாலும் மோசடிகள்,எதிலும் மோசடிகள்.மக்களை ஏமாற்றிபணம் பறிக்கும் கும்பல்ஸ் இல்லாத இடமே இல்லை


நீதித்துறை தூங்கி வழிகிறது
காலத்திற்கு ஒவ்வாத சட்ட பிரிவுகள்
நிரபராதிகளை விட குற்றவாளிகளுக்குதான் 
சாதகமான சட்ட பிரிவுகள் லட்சகணக்கான வழக்குகள் 
பல்லாண்டுகளாக தேக்கம்


கொடுமையான குற்றவாளிகளுக்கும் 
தண்டனை நிறைவேற்ற முடியாத அளவில் 
தவறான போராட்டங்கள்  

தினம் தினம் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள்  சாலை மறியல், வன்முறை பொது சொத்துக்களை சூறையாடுதல் காவல்துறை அடக்குமுறைகள்,துப்பாக்கி சூடுகள், உயிரிழப்புகள் இல்லாது ஒரு நாளும் விடியாது.மக்களின் அல்லல்களுக்கு அளவே இல்லை

மக்களை குழப்பும் பல நூறு அரசியல் கட்சிகள், மத வெறியர்கள்

மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்காத கையாலாகாத மாநில,மத்திய அரசுகள்

எவ்வளவு காலம்தான் இந்நிலை நீடிக்கும்? 
என்று நம் நாட்டு மக்கள் நலமாக வாழ போகிறார்கள்? 
என்று சுயநல அரசியல்வாதிகள் ஒழிந்து
நம் நாட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்






Tuesday, January 3, 2012

தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது





தானே வந்து தமிழகத்தை பதம் பார்த்த தானே புயலின் கோர தாண்டவம் முடிந்து விட்டது 

அது விட்டு சென்றது பேரழிவு

எடுத்துசென்றது பல உயிர்களை

வாழ்வதற்கே வழியில்லாது அனைத்து 
ஆதாரங்களையும் அழித்து விட்டது
கோர புயல் 

மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் ,என்ன செய்வதென்று
புரியாமல் கலங்கி நிற்கின்றனர்

பொறுப்பற்ற மத்திய அரசு தமிழ்நாடு அரசு அறிக்கை கிடைத்தவுடன்
மத்திய குழு பார்வையிட்டு நிதி வழங்கும் என்று அறிக்கை விடுகிறது

தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக மின் இணைப்புக்களை சரிசெய்து குடிநீர் வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

அனைத்து சேதங்களுக்கும் முன்னுரிமை  அளித்து இழப்பீடு தொகைகளை அறிவித்துவருகிறது

சாலைகள் முழுவதுமாக அழிந்துவிட்டதால் எந்த உதவிகளும் பல நூறு கிராமங்களுக்கு பல நாட்களாகியும் போய் சேரவில்லை .

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆண்டுதோறும் புயல் தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருவது வாடிக்கை .இது மாநில அரசுகளுக்கும் தெரியும் ,மத்திய அரசுக்கும் தெரியும்

தற்போதுள்ள அதி நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தும் அரசு நிர்வாகம் தூங்குகிறது

மொத்தமாக அழிந்துவிட்டபிறகு கணக்கெடுப்பு எதற்கு?

முதலில் உயிர் பிழைக்க உதவிகள் அளிக்கப்படவேண்டும் 
பிறகு பார்த்துகொள்ளலாம் மற்ற உதவிகளை 
.
வழக்கம்போல் எதிர்கட்சிகள் தங்கள் சுய விளம்பரதிற்க்காக 
தங்கள் பங்குக்கு இடங்களை பார்வையிடுவதும் 
ஆளும் கட்சிக்கே எதிராக அறிக்கைகள் விடுவதும் 
வழக்கமான ஒன்று.இப்போதும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள் 
அதைத்தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது 
அவர்கள் என்றும் திருந்தபோவதும் கிடையாது .

அனைத்தையும் இழந்த மக்கள் தங்களை நிலைபடுத்தி கொள்ளும் வரை அவர்களுக்கு தினமும், உணவு, குடிநீர், மருத்துவ வசதி, தற்காலிக தங்கும் வசதி ஆகியவையே உடனடி தேவை.


முதலில் இந்த பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் 


இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது  

அதை அரசு இயந்திரங்கள் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள்

அதற்க்கு, ஹெலிகாப்டர்கள், ராணுவம், போன்ற வசதிகளை பயன்படுத்தி அரசு நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கையில் இறங்காவிடில் மக்களின் கோபம் எதில் போய் முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.


Monday, January 2, 2012

பெண்ணே எல்லாம் ஆவதும் உன்னாலே
அழிவதும் உன்னாலே 

பெண்ணே நீ தேவதை 
ஆம் தேவதையாய் இருக்கும் வரை ஆராதிக்கபடுவாய்
அதுவரை ஆராதிப்பவரையும் பாதுகாப்பாய்
நீயும் பாதுகாப்பாய் இருப்பாய்

ஆனால் நீ மானிடராய் பிறந்துவிட்டால் ?

மேடுகளும் பள்ளங்களும் கொண்ட வடிவம் நீ
உன் வாழ்க்கையும் அவ்வாறே மேடு பள்ளங்கள்
கொண்டதாக ஆகிவிட்டதோ?

உன் தோற்றமும் அழகு,பார்வை அழகு, பேச்சு அழகு, உன் செயல் அழகு
அனைத்தும் அழகே உருவெடுத்த நீ அனைவரையும் உன்பால்
கவர்ந்திழுக்கிறாய்

அதுவே உன் பலம் அதுவே உன் பலவீனம்

உன்னில் சிலர்  இந்த உலகை ஆட்டி படைக்கின்றனர்

ஆனால் உன்னில் பெரும்பான்மையினர் அல்லல்படுவதர்க்கே
பிறவி எடுத்துள்ளதை காணும்போது உள்ளத்தில் ரத்தம் வடிகிறது 

ரத்தம் செய்து பிரசவித்த உன் படைப்புகள் உன்னை போகபோருளாக கருதி உன்னை ரத்தம் கக்க செய்து உன் வாழ்க்கையை சீரழிக்கும் மிருகங்களை 
யார் திருத்துவது ?  

அதனால்தான் என்னவோ நீயே உன்னை உன் கருவில் இருக்கும்போதே கருக செய்து இவ்வுலகிற்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறாயோ? 

இந்தியர்களே எச்சரிக்கை

அந்நிய  நாட்டு வணிகர்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது பற்றி

வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் 
இங்குள்ள தேச துரோகிகளின் துணையோடு 
கொள்ளையர்களாக   மாறி
நம் நாட்டை கொள்ளையடித்து 
நம் நாட்டையே கைபற்றிகொண்டு
நம்மை அடிமைகளாக ஆக்கி
நம் கலாசாரத்தை சீரழித்து 
நாம் நாட்டு பாரம்பரியமான
விவசாய முறைகளையும்
சிறு தொழில்களையும் அழித்து 
நம் மக்களை வறுமைக்குள் தள்ளி
நம் உரிமைகளை பறித்து
நாம் முன்னேற விடாமல் 
பலவிதமான கொடுமையான 
சட்டங்களை போட்டு 
இருநூறு ஆண்டுகளுக்கு மேல் 
நம்மை துன்புறுத்திய ஆங்கிலேயர்களை 
மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் 
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் 
செய்து பெற்ற சுதந்திரத்தை 
இழக்கும் விதமாக மீண்டும் அவர்களை 
நம் நாட்டில் வணிகம் செய்ய 
காங்கிரஸ் தலைமையிலான அரசு 
முடிவு எடுத்திருப்பது 
தற்கொலைக்கு சமானமானது 

இதன் காரணகர்த்தா யார் என்பதை அனைவரும் அறிவர் 

காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விட சொன்னதை அக்கட்சியில் உள்ள கொள்ளை கூட்டம் ஏற்க்க மறுத்ததின்  விளைவுதான் இன்று நம் நாடு சந்திக்கும்
தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளுக்கும் காரணம் 

இன்று ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடம் இல்லையே தவிர இன்னும்
அந்த கூட்டம் நம்மை அடிமைகளாக வைக்க ஆட்சி செய்த அதே
முறையைத்தான் இன்றளவும் இன்றைய ஆட்சியாளர்கள்  கடைபிடித்து வருகின்றனர்

நாட்டில் எங்கும் வறுமை, ஏழை மக்களை சுரண்டி வாழும் அதிகார வர்க்கம்
பாதுகாப்பின்மை மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ உறுதியற்ற சூழ்நிலை என எண்ணற்ற தீராத பிரச்சினைகள்

எனவே இந்திய மக்கள் இதற்க்கு அனுமதித்தால் அவர்களை காப்பாற்ற இன்னொரு காந்தி இப்போது பிறக்கமாட்டார். அதற்க்கு முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம். 

ஏற்கெனவே பன்னாட்டு பன்னாடை நிறுவனங்கள்    நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்களிலும் நுழைந்து பல லட்சம் கோடிகள் சுருட்டி கொண்டு
கொழித்து வருகின்றன

இந்தியர்களே எச்சரிக்கை