Saturday, March 10, 2012

கிளி பேச்சு கேட்கவா?

Parrot by forbesimages
கிளி பேச்சு கேட்கவா?








கிளியை வைத்து என்னென்ன செய்யலாம்?


கூண்டில் அடைத்து வைத்து
கிளி ஜோசியம் சொல்லி
காசு பார்க்கலாம்
அதற்கென்றே மதுரை 
வாழ் மக்கள் இருக்கிறார்கள்

பாவம் அவகளுக்கு கிளியை வைத்து 
அப்படி என்ன சம்பாதித்து விட முடியும்?
இருந்தும் அவர்கள் அதை வைத்து 
பலவகையில் குழம்பி போயுள்ள மக்களுக்கு
மிகவும் மலிவான விலையில் 
ஆறுதல் தந்து கொண்டு தங்கள்
பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்

கிளி நாம் நாட்டு  கலாசாரத்தில் நன்றாக ஊறி விட்டது
சுகர் என்ற மகரிரிஷி முகம் கிளி வடிவாக உள்ளது
அவர் பெயரில் மனிதர்களின் எதிகால பலன்களை
சொல்லும் சுகர் நாடி உள்ளது 
அதை சொல்பவர்களும் இருக்கிறார்கள்
அவருக்கு பக்தர்களும் இருகிறார்கள்

திருப்புகழ் அருணகிரிநாதர் தன பூதஉடலை 
சம்பந்தாண்டான் என்ற 
காளி உபாசகர் அழித்துவிட்டபோது
கிளி உடலில் தாங்கி  கந்தரனுபூதி என்ற 
பாடல்களை பாடியதாக வரலாறு


மதுரை மீனாக்ஷியும் ,ஆண்டாள் நாச்சியாரும் 
தங்கள் கையில் கிளியை தாங்கி கொண்டு 
காட்சி தருகிறார்கள்  


அழகான பெண்ணை பச்சைக்கிளி என்றும் 
அழகாக தமிழ் பேசும் பெண்ணை
பைந்தமிழ் பேசும் பசைக்கிளி என்றும் 
கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்கவா என்றும் 
கிளி பற்றிய பல செய்திகள் உண்டு

ஆனால் இன்று சொல்லப்போகும் 
செய்தி என்ன வென்றால் 
ஒரு நபர் அந்தமான்  கிளி வளர்க்க 
ஆசைப்பட்டு வலைத்தளம் மூலம் 
இருபதாயிரம் ரூபாய் ஏமாந்த கதைதான்
.
கிளி வாங்க இவர்  விரித்த வலையில் 
கிளி விழவில்லை
இவர்தான் வலையில் 
விழுந்துவிட்டது பரிதாபகரமானது.


ஏமாற்றுவதில்தான்  எத்தனை வகை ?
தலை சுற்றுகிறது. 

No comments: