Friday, March 9, 2012

தேர்தல்களும் தேறுதல்களும்

தேர்தல்களும் தேறுதல்களும் 

5மாநிலங்களில் சட்டசபைக்கு தேர்தல்கள் நடந்து 
முடிந்து விட்டன 


ராகுல் காந்தி கடுமையாக பிரசாரம் மேற்கொண்டு மாயாவதிக்கு எதிராக 
ஊழல்  குற்றச்சாட்டுகளை கூறியதால் மட்டும் அவர் ஆட்சியை இழந்திருக்க வாய்ப்பில்லை 
அவர் தம் ஆட்சி காலத்தில் மக்களின் வறுமை நிலையை முன்னேற்ற 
நடவடிக்கை எடுக்காமல் தனக்கு சிலை வைப்பதில் காட்டிய ஆர்வகோளாறு அவருக்கு ஆட்சி பறிபோய்விட்டது 


முலாயம்சிங்  தன மகனை முன்னிறுத்தி ஆட்சியை பிடித்துவிட்டார்
அவராவது உருப்படியாக செய்யபோகிறாரா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்

பாஜ க வழக்கம்போல் மக்களின் வாழ்க்கைதரம்  மேம்படுத்துவதை பற்றி சிந்திக்காமல் சொதப்பியதால் உருப்படியாக ஒன்றும் சாதிக்கவில்லை

காங்கிரஸ்சில் தலைவர்கள்  நிறைய இருப்பதால் 
தேர்தலில்தோற்றுவிட்டதாக அதன் தலைவர் சொதப்பியிருக்கிறார்
அந்த கட்சியில் பல மாநிலங்களில் தொண்டர்களை விட தலைவர்கள்  அதிகம் என்பதை மக்கள் எல்லோருக்கும் முன்பே  தெரியும் 

பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் சிக்கி 
ஒவ்வொருவராக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அந்த கட்சி
விலைவாசியை கட்டுபடுத்த வக்கில்லாத கட்சி,
நாடெங்கும் கொள்ளை நோய் என பரவிவரும் தீவிரவாதத்தை கட்டுபடுத்த இயலாத கட்சி 
நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நீண்ட  கால நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யாமல் 
அவற்றின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் கட்சி
,
 பல முக்கிய பிரச்சினைகளை தீர்க்க 
கையாலாகாத நிலையில் 
பல புளுகுமூட்டைகளை தினம் தினம் 
அவிழ்த்து விட்டு கொண்டு வரும் நிலையில்
 பல்வேறு காரணங்களை கூறி 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டு 
கதை விட்டு கொண்டிருக்கின்றது
மத்தியில் ஆளும் கட்சி. 


மக்கள் அனைத்தையும் 
நன்றாக அறிவார்கள் 


கூடிய சீக்கிரம் அந்த கட்சிக்கு நிரந்தரமாக ஓய்வு இந்திய மக்கள் கொடுத்துவிடுவார்கள் .

No comments: