Thursday, February 23, 2012

தமிழ்நாட்டில் வங்கி கொள்ளையர்களை உயிரோடு பிடிக்காமல் அனைவரையும் கொன்றுவிட்டது முறையா?

தமிழ்நாட்டில் வங்கி கொள்ளையர்களை
உயிரோடு பிடிக்காமல் அனைவரையும்
கொன்றுவிட்டது முறையா?

why this kolaveri kolaveri di?

இன்று தமிழ் நாட்டில் பல லட்சம் ரூபாய்களை பட்ட பகலில் 
கொள்ளையடித்த வங்கி கொள்ளையர்களை கண்டுபிடித்து 
விட்டதாக காவல் துறை அறிவித்த சில மணி நேரத்திலேயே 
அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்ததை அனைவரும் 
பாராட்டும் வேளையில் அவர்களை உயிரோடு பிடிக்காமல் 
அனைவரையும் அவசர அவசரமாக் கொன்று அப்புறப்படுத்தியது
அனைவரின் உள்ளத்திலும் பல்வேறு சந்தேகங்களை 
ஏற்படுத்தியுள்ளது

சிங்கம் புலி யானை போன்ற கொடிய மிருகங்களை பிடிக்க 
துப்பாக்கியில் மயக்க மருந்து நிரப்பப்பட்ட ஊசியை செலுத்தி 
பிடிக்கின்றனர்.

அதுபோல் கொள்ளையர்களில் ஒருவரையாவது உயிரோடு 
பிடித்திருக்கலாம்
அல்லது அவர்கள் தங்கியிருந்தஅறையில் மயக்கத்தை தரும்
வாயுக்களை செலுத்தி அவர்கள் மயங்கி விழுந்த பின் 
அவர்களை பிடித்திருக்கலாம்

அவர்கள் ஒருவர் கூட உயிரோடு இல்லாமல் போனதால் 
அவர்கள் உண்மையில் கொள்ளையர்களா என்பதே கேள்விக்குறியாக
உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் ஐயம் எழுப்பியுள்ளனர்

மேலும் கொள்ளை தொடர்பாக சுட்டு கொள்ளப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களின் தகவல்களை சுலபமாக அறிந்து கொள்ள
கிடைத்த வாய்ப்பை காவல்துறை இழந்துவிட்டது மிகவும்
துரதிஷ்டவசமானது

இனிமேலாவது இது போன்ற குற்றவாளிகளை நவீன யுக்திகளை
பயன்படுத்தி உயிருடன் பிடித்து விசாரிக்க உரிய ஏற்பாடுகளை 
காவல் துறை மேற்கொள்ளவேண்டும். 

திருடர்களை கொல்வதால் மட்டும் திருட்டுக்கள் என்றும் குறையபோவதில்லை.

காவல்துறையினரின் அறிவுரைகளை காற்றில் பறக்க விட்டு 
கண்காணிப்பு காமிராக்களை நிறுவாமல்,ஆயுதம் தாங்கிய காவலாளிகளை நியமிக்காமல், பொதுமக்களின் பணம், மற்றும், நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை உரிய முறையில் பாதுகாக்க ஏற்பாடு செய்யாத வங்கிகளின் உரிமையாளர்களும், அதற்க்கு பொறுப்பானவர்கள் மீதும் சட்டம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்களும் இனி எச்சரிக்கையாக் இருக்கவேண்டும்
எதற்க்கெடுத்தாலும் காவல் துறையையே குற்றம் சாட்டுவது 
ஏற்கெனவே ஆட்கள் பற்றாக்குறை, ஓய்வின்றி வேலைப்பளு அரசியல் தலையீடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் மனோ பலத்தை அது நிச்சயம் பாதிக்கும். 

No comments: